ஒட்டுக்கேட்பு: நீடிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம்

2 mins read
6dfcad89-5c9a-4a93-ac11-aea746711f1e
-

புது­டெல்லி: தொலை­பேசி ஒட்­டுக்­கேட்பு (பெகா­சஸ்) விவ­கா­ரம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் விவா­தம் நடத்­தும் வரை போராட்­டம் நீடிக்­கும் என எதிர்க்­கட்­சி­கள் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளன.

ஆனால் மத்­திய அரசு இந்­தக் கோரிக்­கையை ஏற்­கா­மல் பிடி­வா­த­மா­க­வும், ஆண­வத்­து­ட­னும் நடந்து கொள்­வ­தாக அக்­கட்­சி­கள் சாடி உள்­ளன.

தொலை­பேசி ஒட்­டுக்­கேட்பு என்­பது நாட்­டின் பாது­காப்பு சம்­பந்­தப்­பட்­டது என்­ப­தால் உள்­துறை அமைச்­சர் அவை­யில் எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும் என்­றும் அதற்­கேற்ப இரு அவை­க­ளி­லும் விவா­தம் நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் எதிர்க்­கட்­சி­கள் கூறின.

இந்­நி­லை­யில், எதிர்க்­கட்­சி­கள் இணைந்து வெளி­யிட்ட கூட்­டறிக்கை ஒன்­றில், புதிய வேளாண் சட்­டங்­கள், விலை­வாசி ஏற்­றம் ஆகி­யவை குறித்­தும் விவா­திப்­பது அவ­சி­யம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், ஓர­ணி­யில் நிற்­கும் எதிர்க்­கட்­சி­களைக் கேவ­லப்­ப­டுத்த தவ­றான பிர­சா­ரத்தை மத்­திய அரசு கட்­ட­விழ்த்துவிட்டுள்­ள­தா­க­வும் அதில் கூறப்­பட்­டுள்­ளது.

14 எதிர்க்­கட்­சி­க­ளைச் சேர்ந்த 18 தலை­வர்­கள் இந்த அறிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

கடந்த 12 நாள்­க­ளாக நாடாளு­மன்ற மழைக்­கால கூட்­டத்­தொடர் தொடர்­பான அவை நட­வ­டிக்கை­கள் அனைத்­தும் எதிர்க்­கட்­சி­களின் போராட்­டம் கார­ண­மாக முடங்கி உள்­ளன. இதை­ய­டுத்து பிர­த­மர் மோடி அக்­கட்­சி­களை சாடி­யுள்­ளார்.

"ஒட்­டுக்­கேட்பு விவ­கா­ரம் தொடர்பாக மத்­திய தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் உரிய விளக்­கம் அளித்­துள்­ளார். ஆனால் அதை கவ­னத்­தில் கொள்­ளா­மல் எதிர்க்­கட்­சி­கள்­தான் பிடி­வா­தப் போக்­கு­டன் செயல்­ப­டு­கின்­றன. இத­னால் நாடா­ளு­மன்ற அலு­வல் நேரம் முற்­றி­லு­மாக வீணா­கிறது என்று பாஜக சாடி­யுள்­ளது.

ஆனால் மத்­திய அர­சின் பிடி­வா­தப் போக்கே இதற்­குக் கார­ணம் என எதிர்க்­கட்­சி­கள் பதி­லடி கொடுத்­துள்­ளன.

மேலும் ஒட்­டுக்­கேட்பு விவ­கா­ரம், வேளாண் சட்­டங்­கள், விலை­வாசி உயர்வு உள்­ளிட்ட பிரச்­சி­னை­களில் மத்திய அரசுக்கு எதிராக ஓர­ணி­யில் நிற்­பது என­வும் அக்­கட்­சி­கள் முடிவு செய்­துள்­ளன.