இனி கோவில் வரவு, செலவுக் கணக்குகள் இணையத் தளத்தில் பதிவேற்றப்படும்

இனி கோவில் வரவு, செலவுக் கணக்குகள் இணையத் தளத்தில் பதிவேற்றப்படும்

1 mins read
941e3c4a-3c0b-4db5-986f-02d2a5cfc269
-

சென்னை: தமி­ழ­கத்­தின் எந்தப் பகு­தி­யில் கோவில் நிலங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இருந்­தா­லும் அவை நிச்­ச­ய­மாக மீட்­கப்­படும் என இந்­து ­ச­மய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், கோவில்­களின் வரவு, செலவுக் கணக்கு­களை இனி இணை­யம் வழி பொது­மக்­கள் பார்­வை­யிட முடி­யும் என்­றார்.

"கோவில்­க­ளின் நில ஆக்கி­ர­மிப்­பு­கள் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மீட்­கப்­படும் நிலங்­கள் அறம் வளர்க்­கும் பணிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும். மேலும், திருக்­கோவில்­க­ளின் வரு­வாயை பெருக்­க­வும் திட்­டம் வகுக்­கப்­படும்.

"அடுத்த ஒரு வாரத்­துக்­குள் அனைத்து கோவில்­க­ளின் வரவு, செல­வுக் கணக்கு விவ­ரங்­கள் இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­படும்," என்­றார் அமைச்­சர் சேகர் பாபு.

கோவில்­க­ளைக் கொள்­ளை­ய­டிக்­கும் ஒருசில கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் நிலப் பட்­டாக்­களைக் கூட பெயர் மாற்­றம் செய்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அந்த நிலங்­களும் நிச்­ச­யம் மீட்­கப்­படும் என்­றார். சென்­னை­யில் உள்ள கோவி­லுக்­குச் சொந்­த­மான 142 ஏக்­கர் நிலங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். அறநிலையத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.