தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாமக: சாதிப்பெயரை அகற்றினால் அடையாளமும் அழியும்

2 mins read
b9090d5c-809d-4c79-a111-41118ef81164
-

சென்னை: பாட­நூல்­களில் இடம் பெற்­றி­ருக்­கும் தலை­வர்­க­ளின் பெயர்­களில் உள்ள சாதிக்­கான அடையாளத்தை நீக்குவது என்­பது புரி­தல் இல்­லாத செயல் என்று பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கூறியுள்ளார்.

அதே­ச­ம­யம் சாதி­களை ஒழிக்க வேண்­டும் என்ற அர­சின் நோக்­கம் வர­வேற்­கத்­தக்­கது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ்­நாடு மாநில பாடத்­திட்டத்­தின் கீழ் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள 12ஆம் வகுப்­புக்­கா­ன பொதுத்­த­மிழ் பாட­நூ­லில் வர­லாற்­றி­லும் இடம் பெற்­றி­ருக்­கும் தமி­ழ­றி­ஞர்­கள் பல­ரின் பெயர்­களில் இருந்து சாதியை குறிக்­கும் பகுதி மட்­டும் நீக்­கப்­பட்­டுள்­ளன. இது குறித்து கல­வை­யான விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் சாதிக்கு பதி­லாக சான்­றோர்­க­ளின் அடை­யா­ளத்தை தான் அழிக்­கும் என ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

உ.வே.சாமி­நா­த அய்­யர் என்பதில் இருந்து உ.வே.சாமி­நா­தர் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது என்று அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"வ.உ.சிதம்­ப­ரம் பிள்ளை, உ.வே.சாமி­நாத அய்­ய­ரின் ஆசி­ரி­யர் மீனாட்­சி­சுந்­த­ரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழு­திய மாய­வரம் வேத­நா­ய­கம் பிள்ளை, 'தமி­ழன் என்று சொல்­லடா... தலை நிமிர்ந்து நில்­லடா' என்று தமி­ழ­ரின் தன்­மா­னத்தை உல­கிற்கு உணர்த்­திய நாமக்­கல் கவி­ஞர் வே. இரா­ம­லிங்­கம் பிள்ளை, இந்­தி­யா­வின் முதல் பெண் மருத்­து­வ­ரும் சமூகப் போரா­ளி­யு­மான முத்­து­லட்­சுமி ரெட்டி, இலங்கை தமிழ் அறி­ஞர் சி.டபிள்யூ. தாமோ­த­ரம் பிள்ளை உள்­ளிட்ட தலை­வர்­கள், தமி­ழறிஞர்­க­ளின் பெயர்­க­ளின் பின்­னால் உள்ள சாதிப் பெயர்­களும் நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே நேரத்­தில் தேசி­கர், தீக்­‌ஷி­தர் போன்ற சாதி பெயர்­கள் தமிழ் பாட­நூ­லில் இருந்து நீக்­கப்­ப­ட­வில்லை," என ராம­தாஸ் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

தமி­ழ­றி­ஞர்­கள் மற்­றும் தலை­வர்­க­ளின் பெய­ருக்கு பின்­னால் உள்ள சாதிப்­பெ­யர்­கள் நீக்­கப்­பட்­ட­தற்கு கார­ணம் சாதி ஒழிப்­பாக தான் இருக்க வேண்­டும் என்று யூகிக்க முடி­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அனைத்து மக்­க­ளி­ட­மும் சமத்­து­வத்தை ஏற்­ப­டுத்­து­வ­தன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடி­யும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

அதை விடுத்து பாட­நூல்­களில் இடம் பெற்­றி­ருக்­கும் தலை­வர்­க­ளின் பெயர்­களில் உள்ள சாதியை நீக்­கு­வது என்­பது புரி­தல் இல்­லாத செய­ல் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.