கருணாநிதி பல்கலைக்கழகம்: விசிக விருப்பம்

கருணாநிதி பல்கலைக்கழகம்: விசிக விருப்பம்

1 mins read
62c0e804-e422-4227-ba9c-a38fd27d8115
ஓசூர் நகரில் கருணாநிதி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: முன்­னாள் தமி­ழக முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் மூன்­றா­மாண்டு நினை­வு­தி­னம் நேற்று கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி காலமானார். அவரது நினைவுதின­மான நேற்று, சென்னை மெரினா கடற்­கரை அண்ணா நினை­விட வளா­கத்­தில் அமைந்­துள்ள கரு­ணா­நிதி நினை­வி­டத்­தில் மு.க.ஸ்டா­லின், துரை­மு­ரு­கன், கே.என்.நேரு உள்­ளிட்­ட­ அ­மைச்­சர்­கள், திமுக பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு, மக­ளி­ர­ணிச் செய­லா­ளர் கனி­மொழி உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் அஞ்­சலி செலுத்­தி­னர்.

விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்­சி (விசிக) தலை­வர் தொல் திரு­மா­வ­ள­வன் நேற்று ஓர் அறிக்­கையை வெளியிட்­டார்.

அதில், "தன் வாழ்­நாள் முழு­வ­தும் தமிழ் மொழி­யின் பாது­காப்­புக்­கா­க­வும் மேன்­மைக்­கா­க­வும் அரும்­பெ­ரும் தொண்­டாற்­றிய கரு­ணா­நி­தி­யின் நினை­வைப் போற்­றும் வகை­யில் அவ­ரது பெய­ரில் தமி­ழ­கத்­தில் மொழி­யி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் ஒன்­றைத் தொடங்க வேண்­டும்," என்று தெரி­வித்­துள்­ளார்.