ஆடி அமாவாசை நாளில் கோயில், குளம் மூடல்; பக்தர்கள் ஏமாற்றம்

2 mins read
e1724cd7-0281-4dab-b380-8979277fa3ef
-

சென்னை: ஆடி அமா­வாசை நாளான நேற்று அர­சாங்­கக் கட்டுப்­ பாட்­டில் உள்ள கோயில், குளங்கள் மூடப்­பட்­ட­தால் பக்­தர்­கள் ஏமாற்­றம் அடைந்­த­னர். குறிப்­பாக வேதா­ரண்­யம் கடற்­க­ரை­யில் தர்ப்­ப­ணம் கொடுக்க முடி­யா­மல் பக்­தர்­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்­பி­னர்.

வழி­பாட்­டுத் தலங்­களில் மக்­கள் அதி­கம் குவி­வ­தால் கிரு­மித் தொற்றுப் பர­வல் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.

இத­னால் விழாக்­கால நாட்­க­ளி­லும் விடு­முறை நாட்­க­ளி­லும் சுவாமி தரி­ச­னத்­துக்­குத் தடை விதிக்­கப்­பட்டு வரு­கிறது.

அடுத்த வாரத்­தி­லி­ருந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்­க­ளி­லும் அனைத்து வழி­பாட்டுத் தலங்­க­ளி­லும் பொது மக்­கள் வழி­பாட்­டுக்குத் தடை விதித்து அண்­மை­யில் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ளார். இந்த உத்­த­ரவு இன்று முதல் அம­லுக்கு வரு­கிறது.

அதே சம­யத்­தில் நேற்று ஆடி அமா­வாசை நாளில் தங்­க­ளின் முன்­னோ­ருக்கு தர்ப்­ப­ணம் அளிப்­ப­தற்­காக கோயில் குளங்­களில் பக்­தர்­கள் குவி­ந்து தர்ப்­ப­ணம் முடித்து, கோவில்­களில் வழி­பாடு நடத்­து­வர்.

இத­னால் நேற்று கோயில்­களில் பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்குத் தடை விதிக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக பேசிய அமைச்­சர் சேகர்­பாபு, "அண்­மைய கால­மாக கொரோனா தொற்று மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது. இதைக் கட்­டுப்­ப­டுத்த அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து கோவில்­ க­ளி­லும் திங்­கள் முதல் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்­கள் பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் ஆடி அமா­வாசை, 11ஆம் தேதி ஆடிப் பூரம் ஆகிய இரு நாட்­க­ளி­லும் கோவில்­களில் பக்­தர்­கள் கூட்­டம் அலை­மோ­தும். இதனை தவிர்க்க, குறிப்­பிட்ட இரண்டு நாட்­க­ளி­லும் கோயில்­களில் பக்­தர்­கள் தரி­ச­னம் ரத்து செய்­யப்­பட்டது. அதே­நே­ரம், ஆகம விதி­க­ளின்­படி கோயில்களில் பூஜை­கள் நடை­பெ­றும்," என்றார்.

இந்த நிலை­யில் நேற்று வேதா­ரண்­யம் கடற்­க­ரைக்கு தர்ப்­ப­ணம் கொடுப்­ப­தற்­காக வந்த பக்­தர்­கள் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­ட­னர்.

ஆடி அமா­வா­சையை முன்­னிட்டு ஆண்­டு­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் வேதா­ரண்­யம், கோடி­யக்­கரை மற்­றும் வேதா­ரண்­யம் கட­லில் இறந்த முன்னோருக்கு தர்ப்­ப­ணம் கொடுத்து புனித நீராடி, பின்பு வேதா­ரண்­யம் வேதா­ரண்­யேஸ்­வ­ரர் சுவா­மியை வழி­ப­டு­வார்­கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பர­வல் கார­ண­மாக மாவட்ட நிர்­வா­கம் ஆடி அமா­வா­சைக்கு கட­லில் குளிப்­ப­தற்குத் தடை விதித்­துள்­ளது.

இதனால் பக்­தர்­கள் நேற்று ஏமாற்­றத்­து­டன் குளிக்க முடி­யா­மல் திரும்பிச் சென்­ற­னர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறை களிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். தஞ்சை புதுஆறு படித் துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இந்நிலையில், தர்ப்பணம் கொடுப்பதற்காக வைகை ஆற்றில் தடையை மீறி குவிந்த மக்களை போலிசார் எச்சரித்து வெளியேற்றி னர்.