சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. அண்மையில் புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் திரை யரங்குகள் திறக்கப்பட்டன.
தமிழகத்திலும், தீபாவளிக்குள் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்தும் ஓ.டி.டி. தளப் போட்டியைச் சமாளிப்பது குறித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் அனைத்து திரை யரங்குகளிலும் இவ்வாண்டுக்குள் டிக்கெட் விற்பனையை கணினி மயமாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஓ.டி.டி.,யைச் சமாளிக்க சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவும் திரையரங்குகளை விரைந்து திறக்க அரசை வலியுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. ஓ.டி.டி.க்கு ஆதரவு தரும் நடிகர், நடிகையரின் படங்களுக்கு கடிவாளம் போடவும் திரையரங்கு உரிமையாளர்கள் திட்ட மிட்டு வருகின்றனர்.

