தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனியில் மீண்டும் தமிழில் வழிபாடு

2 mins read
9462664c-21b9-40f6-b2b4-c32c4c84ce77
-

பழனி: தமி­ழ­கம் முழு­வ­தும் இந்­து­ ச­ம­ய­ அ­ற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள கோவில்­களில் தமி­ழில் அர்ச்­சனை செய்­யும் நடை­முறை கடந்த 5ஆம் தேதி தேதி முதல் தொடங்­கி­யது.

சென்னை, திருமயிலைக் கோவில் என்னும் கபா­லீஸ்­வ­ரர் கோவி­லில் இதனைத் தொடங்கி வைத்த அமைச்­சர் சேகர்­பாபு, விரை­வில் அனைத்துக் கோவில்­க­ளி­லும் இந்த நடை­முறை அமல்­படுத்­தப்­படும் என்று தெரி­வித்­தார். அதன்­படி காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர் உள்­ளிட்ட பல்­வேறு கோவில்­களில் தமி­ழ் வழிபாடு தொடங்­கி­யது.

ஒவ்­வொரு கோவி­லி­லும் தமி­ழில் அர்ச்­சனை செய்­வது குறித்து அறிவிப்புப்பலகை வைக்­கப்­பட்டு அதில் எந்த அர்ச்­ச­கர் இதனை செய்ய உள்­ளார் என்­பது குறித்த பெயர் மற்­றும் செல்­போன் எண் தெரி­விக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது. இதே போல் தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள கோவில்­களில் தமி­ழில் குட­மு­ழுக்கு செய்­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­ப­ட உள்­ளது.

முரு­கப்­பெ­ரு­மா­னின் 3ஆம் படை­வீ­டான பழ­னிக்கு தமி­ழ­கம் முழு­வ­தும் இருந்து பக்­தர்­கள் தின­சரி ஆயி­ரக்­க­ணக்­கான அள­வில் வந்து செல்­கின்­ற­னர். மேலும் வெளி­மாநி­லம் மற்­றும் வெளி­நா­டு­களை சேர்ந்த பக்­தர்­கள் வரு­கின்­ற­னர். ஆனால் தற்­போது கொரோனா கட்­டுப்­பா­டு­க­ளால் சற்று குறைந்­துள்­ளது.

பழ­னி­யில் இதற்­கான பணி­கள் கடந்த சில நாட்­க­ளாக நடை­பெற்று வந்­தது. வார இறுதி நாட்­களில் கோவில்­கள் அடைக்­கப்­பட்டு இருந்த நிலை­யில் நேற்று காலை முதல் வழக்­கம் போல் பழனி மலைக்­கோ­வில் நடை திறக்­கப்­பட்டு வழிபாட்டுக்குப் பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

மேலும் தமி­ழில் அர்ச்­சனை செய்­யும் நடை­முறை நேற்று தொடங்­கி­யது. இத­னால் கோவி­லுக்கு வந்த பக்­தர்­கள் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர். நீண்ட நாட்­க­ளாக தமிழ்­க­ட­வுள் முரு­க­னுக்கு தமி­ழில் அர்ச்­சனை செய்ய வேண்­டும் என்று பக்­தர்­கள் கோரிக்கை வைத்­தி­ருந்த நிலை­யில் அது நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. இதே போல் பழ­னி­கோ­வி­லின் துணைக்கோ­வில்­க­ளான திரு­ஆ­வி­னன்­குடி, பெரி­ய­நா­யகி அம்­மன், பெரி­யா­வு­டை­யார், மாரி­யம்­மன், கொடைக்­கா­னல் குறிஞ்சி ஆண்­ட­வர் கோவில்­க­ளி­லும் தமி­ழில் அர்ச்­சனை செய்­யும் முறை நேற்று தொடங்­கி­யது. ஒவ்­வொரு கோவி­லி­லும் இது குறித்து அறி­விப்பு பலகை வைக்­கப்­பட்டு தமி­ழில் அர்ச்­சனை செய்­யும் அர்ச்­ச­க­ரின் பெய­ரும் அதில் இடம்­பெற்­றி­ருந்­தது.