கொள்ளையர் ஐவருக்கு 10 ஆண்டு சிறை

கொள்ளையர் ஐவருக்கு 10 ஆண்டு சிறை

1 mins read
f34a398a-c62d-40ee-9bd8-2cdf54db25ab
வங்கிக் கொள்ளையர்களில் முதலில் பிடிபட்ட நால்வர். கோப்புப்படம்: ஊடகம் -

திரு­வா­ரூர்: திரு­வா­ரூர் மாவட்­டத்­தின் மன்­னார்­கு­டி­யில் உள்ள ஒரு வங்­கி­யில் துப்­பாக்­கிக் கொள்­ளை­யர்­கள் ஏழு பேருக்கு, மன்­னார்­குடி அமர்வு நீதி­மன்­றம் நேற்று நீண்ட சிறைத்­தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. அவர்­களில் ஐந்து பேருக்­குத் தலா 10 ஆண்­டு­களும் ஒரு­வ­ருக்கு 9 ஆண்­டு­களும் மற்­றொ­ரு­வ­ருக்கு ஏழு ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. சென்ற 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிற்­ப­கல் நேரத்­தில், மன்­னார்­குடி அரு­கே­யுள்ள அசே­சம் என்ற ஊரில் தமிழ்­நாடு மொர்க்­கன்­டைல் வங்­கி­யில் புகுந்த ஏழு துப்­பாக்­கிக் கொள்­ளை­யர்­கள், அவ்­வங்­கி­யின் மேலா­ளரை மிரட்டி வங்­கி­யில் இருந்த ரூ.5,58,550 ரொக்­கம், ரூ.2.51 லட்சம் மதிப்புள்ள நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். இது­தொ­டர்­பாக அவ்­வங்கி மேலா­ளர் கோவிந்­த­ரா­ஜன் போலி­சில் புகார் அளித்­தார். அதன் அடிப்­ப­டை­யில், கொள்­ளைச் சம்­ப­வம் குறித்து விசா­ர­ணை­யில் ஈடு­பட்ட போலி­சார் கொள்­ளை­யர்­கள் ஏழு­பே­ரைக் கைது செய்து வழக்­குப் பதிவு செய்­த­னர். அந்த வழக்கை விசா­ரித்து வந்த நீதி­மன்­றம், நேற்று முன்­தி­னம் தீர்ப்­ப­ளித்­தது.

அதில், கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த மரி­ய­செல்­வம்(35), மீரான் மைதீன்(31), சுட­லை­மணி(31), மதுரை மாவட்­டம் கருப்­பா­யூ­ரணி அயூப்­கான்(29), ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் திரு­வா­டா­னை­யைச் சேர்ந்த ராஜா(35) ஆகிய 5 பேருக்கு 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த முத்­துக்­கு­மார்(31) என்­ப­வ­ருக்கு 9 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, சுட­லை­மணி என்ற மணி­கண்­டன்(25) என்­ப­வ­ருக்கு 7 ஆண்­டு­கள் சிறை தண்­டனை விதித்து உத்­த­ர­விட்­டார். தண்­டனை பெற்ற கொள்­ளை­யர்­கள் திருச்சி மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.