தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

2 mins read
61574883-2841-4b2e-b81d-e6a5fc5ea411
-

இந்தியாவில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி வரவு செலவுத் திட்டம்

சென்னை: திமுக ஆட்சி பொறுப்­பேற்று இம்­மா­தம் 14ஆம் தேதி­யு­டன் (நாளை) 100 நாட்­கள் ஆகிறது.

அதற்குள் திமுக 120 மக்­கள் நலத் திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது.

இந்நிலை­யில் திமுக ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்து முதல் முறை­யாக இன்று 2021-2022ஆம் ஆண்டுக்­கான பொது வரவு செல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது.

இது மட்­டு­மல்­லா­மல் நாளை சனிக்­கி­ழமை அன்று இந்­தி­யா­வி­லேயே முதல் முறை­யாக வேளாண்­மைத் துறைக்கு தனி வரவு செல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது.

இத­னல் இரு வரவு செல­வுத் திட்­டங்­களில் அடுக்­க­டுக்­கான அறி­விப்­பு­கள் இடம்பெறும் என்று தமி­ழக மக்­களும் விவ­சா­யி­களும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமி­ழக சட்­ட­சபை கூட்­டம் இன்று காலை 10 மணிக்கு கலை­வா­ணர் அரங்­கில் தொடங்­கு­ம்.

நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் வரவு செல­வுத் திட்­டத்தை தாக்­கல் செய்­கி­றார். நாளை வேளாண் பட்­ஜெட்டை அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் தாக்­கல் செய்­கி­றார்.

இன்று வரவு ெசலவு திட்ட உரை­யு­டன் தொடங்­கும் சட்­ட­சபை கூட்­டம் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை மொத்­தம் 29 நாட்­கள் நடை­பெ­றும் என்று சபா­நா­ய­கர் அப்­பாவு அறி­வித்­துள்­ளார்.

காகி­த­மில்லா மின்-பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­படும் என்­று அவர் கூறியுள்ளார்.

அதன்­படி எம்.எல்.ஏ.க்கள் இருக்கை முன்பு கணினி வைக்கப்­ பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு கைய­டக்­கக் கணி­னி­யும் வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஆட்­சி­யில் தாக்­கல் செய்­யப்­படும் முதல் பட்­ஜெட் என்­ப­தால் இதில் என்­னென்ன அறி­விப்­பு­கள் இடம்­பெ­றும், வரி­வி­திப்பு இருக்­குமா? சலு­கை­கள் ஏதும் அறி­விக்­கப்­ப­டுமா? என்ற எதிர்­பார்ப்பு நிலவுகிறது.

இதற்­கி­டையே இந்த சட்­ட­சபை கூட்­டத்­தொ­ட­ரில் எதிர்க்­கட்­சி­கள் பல்­வேறு பிரச்சி­னை­களைக் கிளப்ப திட்­ட­மிட்­டுள்­ளன.

தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன வாக்­கு­று­தி­களில் இன்­னும் என்­னென்ன வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்­பதை பட்டி­யலிட்டு பேச எதிர்க்கட்சிகளின் உறுப்­பி­னர்­கள் தயா­ராகி வரு­கின்­ற­னர்.