சென்னை: சென்னையில் உள்ள 41 வயது வாலிபர் ஒருவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் ஐந்து சிறுநீர கங்களுடன் நடமாடி வருகிறார்.
மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில் அவருக்கு 3வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக 'நியூஸ்18' இணையத்தளம் வெளி யிட்ட தகவல் தெரிவித்தது.
அப்போது வாலிபருக்கு 5வது சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
அவரது சொந்த இரு சிறுநீரகங்கள் தவிர 2வது அறுவை சிகிச்சையில் இரண்டு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன.
நான்கு சிறுநீரகங்களின் செயல்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லாததால் கடைசியாக ஜூலை 10ஆம் தேதி நடந்த அரி தான அறுவை சிகிச்சையில் மற்றொரு சிறுநீரகம் அவருக்குப் பொருத்தப்பட்டது.
நரம்பியல், அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சரவணன், அறுவை சிகிச்சையின்போது பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததாக ஐஏஎன் எஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"புதிய சிறுநீரகம் பொருத்த போதுமான இடம் இருப்பதற்காக பழைய சிறுநீரகங்களை அகற்றியிருக்கலாம். ஆனால் பெருமளவு ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
"மேலும் எதிர்ப்பு சக்தி அதி கரித்து புதிய சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்," என்று அவர் விளக்கினார்.
அந்த 41 வயது நோயாளிக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தது. நாட்பட்ட சிறுநீரகப் பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டு வந்தார்.
வாலிபர் தற்போது தேறி வருவ தாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

