விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறி வாளன் உடல்நலக்குறைவு காரணமாக 'பரோல்'லில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறி வாளன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் சிறுநீரகக் கோளாறு தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.
இதனால் பேரறிவாளன் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

