சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் இது தொடர்பான நட வடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கூடுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை கூறியுள்ளது.

