தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மக்கள்தொகை அடிப்படையில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'

2 mins read
2c8a0b91-b676-4ac4-9fe0-2fe94a71b831
-

சென்னை: தமி­ழ­கத்­தில் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள இட­ஒ­துக்­கீட்­டில், வன்­னி­யர்­க­ளுக்கு 10.5 விழுக்­காடு உள்­ஒ­துக்­கீடு வழங்கி அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் சட்­டம் இயற்­றப் பட்­டது. இந்­தச் சட்­டத்தை எதிர்த்து சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தனி நபர்­கள், அமைப்­பு­கள் என்று 25 பேர் தனித்­த­னி­யாக வழக்­கு­கள் தொடர்ந்­த­னர். அதே­போல, இந்­தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து பா.ம.க. நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ் உள்­ளிட்­டோர் சார்­பில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன.

இந்த வழக்­கு­க­ளுக்கு தமி­ழக அரசு பதில் அளிக்க வேண்­டும் என்று உயர்­நீ­தி­மன்­றம் ஏற்ெக­னவே உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் தமிழ்­நாடு பிற் படுத்­தப்­பட்­டோர், மிக­வும் பிற்படுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறுபான்­மை­யி­னர் நலத்­துறை கூடு­தல் செய­லா­ளர் ஏ.எம்.ஆண்­டி­யப்­பன் தாக்­கல் செய்­துள்ள பதில் மனு­வில் கூறி­யி­ருப்­ப­தா­வது:

"தமிழ்­நாடு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நல ஆணை­யம், வன்­னி­யர்­க­ளுக்கு 10.5 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு வழங்க எந்­தத் தடை­யும் இல்லை என தெரி­வித்­த­தன் அடிப்­ப­டையி லேயே இந்­தச் சட்­டம் கொண்டு வரப்­பட்­டது.

"சீர்­ம­ர­பி­னர் மற்­றும் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்பின­ருக்கு முறையே 7 மற்­றும் 2.5 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு வழங்க ஆணை­யம் பரிந்­து­ரைத்­தது. மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வைச் சேர்ந்தவர்­க­ளின் மக்­கள்­தொ­கைக்கு ஏற்ப இட­ஒ­துக்­கீடு கிடைக்க வேண்­டும் என்ற கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் இந்த இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­பட்டு உள்­ளது.

உச்­ச­நீ­தி­மன்ற உத்­த­ர­வின்­படி, தமிழ்­நாடு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நல ஆணை­யம் 1983ஆம் ஆண்டு நடத்­திய மக்­கள்­தொகை கணக்கெடுப்­பின்­படி, தமி­ழ­கத்­தின் மொத்த மக்­கள்­தொ­கை­யில் வன்­னி­யர்­கள் 13.01 விழுக்­காடு உள்­ள­னர்.

அந்த புள்­ளி­வி­வ­ரத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் அறி­விப்­ப­தற்கு சற்று நேரத்­துக்கு முன்­பாக இந்­தச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக மனு தாரர்­கள் குற்­றம் சாட்­டு­வதை ஏற்க முடி­யாது. மற்ற சாதி­யி­னர் இந்த சட்­டத்­தின் மூலம் பாதிக்­கப்­ப­டு­வர் என மனு­தா­ரர்­கள் கூறு­வது வெறும் கற்­ப­னையே என அதில் தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

இந்த வழக்­கு­கள் தலைமை நீதி­பதி சஞ்­சீவ் பானர்ஜி, நீதி­பதி பி.டி.ஆதி­கே­ச­வலு ஆகி­யோர் முன்பு விசா­ர­ணைக்கு வந்­தன.

அப்­போது இந்த வழக்­கு­க­ளின் விசா­ர­ணை­யில் இருந்து நீதி­பதி ஆதி­கே­ச­வலு வில­கு­வ­தாக கூறி­னார்.

இதை­ய­டுத்து வேறு நீதி­ப­தி­யு­டன் இந்த வழக்­கு­களை விசா­ரிப்­ப­தா­கக் கூறிய தலைமை நீதி­பதி, விசாரணையை ஒத்திவைத்­துள்­ளார்.