'திமுக ஏமாற்றிவிட்டது'

'திமுக ஏமாற்றிவிட்டது'

1 mins read
a889a9df-924d-427e-84dd-2ba12dc715fb
-

சென்னை: தமி­ழக சட்­ட­ச­பை­யில் நேற்று நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் வரவு செல­வுத் திட்ட உரையை அம­ளிக்கு மத்­தி­யில் வாசிக்­கத் தொடங்­கி­ய­தால் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யி­லான அ.தி.மு.க. எம்.எல்.ஏக்­கள் அனை­வ­ரும் வெளி­ந­டப்பு செய்­த­னர்.

பின்­னர் வெளியே செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, தேர்­த­லின்­போது நடை­மு­றைப் ­படுத்த முடி­யாத வாக்­கு­று­தி­களை அளித்து மக்­களை திமுக ஏமாற்றி விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

"தேர்­த­லின்போது 500க்கும் மேற்­பட்ட நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­று­தி­களை திமுக அளித்­துள்­ளது. ஆட்­சிக்கு வந்­த­வு­டன் போடப்­போ­கும் முதல் கையெழுத்தே 'நீட்' தேர்வு ரத்து என்­பது தான் எனக்கூறி­விட்டு ஆட்­சிக்கு வந்து 100 நாட்­கள் ஆகும் நிலை­யில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடி­யா­மல் மாண­வர்­க­ளி­டையே குழப்­பம் ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கிறது.

"வெள்ளை அறிக்­கை­யின் போது உண்­மைக்குப் புறம்­பான தக­வலை நிதி­ய­மைச்­சர் வெளி­யிட்டு இருக்­கி­றார். வாக்­கு­றுதி அளித்­து­விட்டு 'நீட்' தேர்வை ரத்து செய்­யாத திமுக அர­சுக்கு கண்­ட­னத்தை தெரி­வித்துக் கொள்­கி­றேன். அதி­மு­க­வி­னர் பொய் வழக்கு­களைப் போடு­வதை வன்­மை­யாக கண்­டிக்­கி­றோம், பொய் வழக்­கு­களை கண்டு அதி­முக அஞ்­சாது," என்று எடப்­பாடி பழ­னி­சாமி மேலும் கூறி­னார்.