ஜே.பி.நட்டா: இந்தியா முழுவதும் 50 கோடி தடுப்பூசி போட்டு வரலாற்றுச் சாதனை
63 வயது மாது இரு முறை
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்
மும்பை: மும்பை நகரில் உருமாறிய டெல்டா பிளஸ் கிருமிக்கு முதல் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இறுதியில் அந்த 63 வயது மாது உயிரிழந்ததாக கூறிய மரபணு வரிசைஆய்வகம், டெல்டா பிளஸ் கிருமியால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை புதன்கிழமை அன்று உறுதி செய்தது.
அந்த மாது முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தார். ஆனால் அவருக்கு நுரையீரல் நோய் இருந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கிருமிக்கு பலியானவர்களில் இவர் இரண்டாவது நபர் என்று 'த டைம்ஸ் இந்தியா' தெரி வித்தது.
தற்போது மாநிலம் முழுவதும் 65 பேர் டெல்டா பிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் மும்பை நகரைச் சேர்ந்தவர்கள்.
"இதனால் அஞ்சத் தேவையில்லை. ஆனால் முகக்கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்," என்று மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரியான டாக்டர் மங்கல கொமாரே தெரிவித்தார்.
ஜூலை 21ஆம் தேதி மாதுக்கு டெல்டாபிளஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடைசி மூன்று நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை ெபற்று வந்தார். ஜூலை 27ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடன் நெருக்கமாக இருந்தவர்களில் ஆறு பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் சேரிக்கப்பட்டு மரபணு வரிசை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் இருவர் டெல்டாபிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. எஞ்சிய முடிவுகள் இன்னும் வரவில்லை," என்று டாக்டர் மங்கல கொமேரே கூறினார்.
டெல்டாபிளஸ் கிருமிக்குப் பலியானவருக்கு ஏற்கெனவே நுரையீரல் நோய் இருந்துள்ளதால் வீட்டிலேயே உயிர்வாயு சிகிச்சை பெற்று வந்ததாக அவர் சொன்னார்.
அந்த மாதுக்கு இரு முறை கொவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதிவேகத்தில் பரவும் டெல்டா கிருமியிலிருந்து டெல்டா பிளஸ் கிருமி உருமாறியுள்ளது. இவ் வாண்டு முற்பகுதியில் மகாராஷ்டிராவில் அந்த கிருமி அடையாளம் காணப்பட்டது.
இதற்கிடையே வியாழக்கிழமை அன்று அம்மாநிலத்தில் கொவிட்-19 சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் ஆக அதிகமாக வியாழக்கிழமை அன்று 6,388 சம்பவங்கள் தொற்றுச் சம்ப வங்கள் பதிவாகின. தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையும் 200க்கு அதிகரித்துள்ளது.
மும்பை நகரத்தில் தொடர்ந்து 300 சம்பவங்கள் பதிவாகி வரு கின்றன.
இந்த நிலையில் இந்தியா முழு வதும் 50 கோடி (500 மி.) பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வர லாற்றுச் சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் 7ஆம் தேதி அந்தச் சாதனை எட்டப்பட்டது என்று கூறிய திரு ஜே.பி.நட்டா, கடினமானச் சூழல் மற்றும் எதிர்மறையான பிரசாரங்கள் மேற்கொண்டபோதிலும் இந்தியா அதனை சமாளித்து, பெரிய அளவில் வேகமாகதடுப்பூசித் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியுள்ளது என்றார்.
"புகழ் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான். கொரோனாவுக்கு எதிரான போராளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் விடாமுயற்சி, துணிவு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால்தான் இது சாத்தியமானது," என்று திரு நட்டா குறிப்பிட்டார்.
உலகத்திலேயே மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

