திருப்பதி: ஆந்திராவில் வாரங்கல் மாவட்டம் காமரெட்டியை சேர்ந்த 93 வயது பாலைய்யா தனது 20 வயது பேரன் நிகிலுடன் வசித்து வந்தார்.
பாலையாவின் மகன் மற்றும் மருமகள் ஏற்ெகனவே இறந்து விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரகாலாவில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்.
பாலையாவின் உடலைத் தகனம் செய்ய நிகிலிடம் பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை குளிர்சாதனப் பெட்டியில் அவர் அடைத்து வைத்தார்.
தாத்தா இறந்து மூன்று நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பரகாலா போலிஸ் நிலையத்திற்குச் சென்ற நிகில், தன்னுடைய தாத்தா பிணத்தை தகனம் செய்ய பணம் இல்லாததால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து காவல்துறை துணை ஆய்வாளர் சிவராமன் உட்பட போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த பாலையா பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலையாவின் மரணத்தில் சூது இருக்கிறதா என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

