தாத்தா உடலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்த பேரன்

தாத்தா உடலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்த பேரன்

1 mins read
214e260b-40b9-491f-a6af-430e62b8e263
-

திருப்­பதி: ஆந்­தி­ரா­வில் வாரங்­கல் மாவட்­டம் காம­ரெட்­டியை சேர்ந்த 93 வயது பாலைய்யா தனது 20 வயது பேரன் நிகி­லு­டன் வசித்து வந்தார்.

பாலை­யா­வின் மகன் மற்­றும் மரு­ம­கள் ஏற்ெக­னவே இறந்து விட்­ட­னர்.

கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு பர­கா­லா­வில் உள்ள வாடகை வீட்­டில் குடி­யே­றிய அவ­ருக்கு உடல்­ந­லக்குறைவு ஏற்­பட்டு மர­ண­ம­டைந்­தார்.

பாலை­யா­வின் உடலைத் தக­னம் செய்ய நிகி­லி­டம் பணம் இல்­லா­த­தால் தாத்தா பிணத்தை குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் அவர் அடைத்து வைத்­தார்.

தாத்தா இறந்து மூன்று நாட்­கள் ஆன­தால் துர்­நாற்­றம் வீசத் தொடங்­கி­யது.

இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் பர­காலா போலிஸ் நிலை­யத்­திற்குச் சென்ற நிகில், தன்­னு­டைய தாத்தா பிணத்தை தக­னம் செய்ய பணம் இல்­லா­த­தால் குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் வைத்­துள்­ள­தாகக் கூறி­னார்.

இதை­ய­டுத்து காவல்­துறை துணை ஆய்­வா­ளர் சிவ­ரா­மன் உட்­பட போலி­சார் சம்­பவ இடத்­திற்­குச் சென்று குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் அடைத்து வைத்­தி­ருந்த பாலையா பிணத்தை மீட்டு பிரேதப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

பாலை­யா­வின் மர­ணத்­தில் சூது இருக்­கி­றதா என்பது குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.