ஸ்ரீசைலம் கோயிலில் அமித் ஷா குடும்பத்துடன் வழிபாடு

ஸ்ரீசைலம் கோயிலில் அமித் ஷா குடும்பத்துடன் வழிபாடு

1 mins read
17a9c761-09da-4d2c-80bf-f3f5bc4bb39e
ஸ்ரீசைலம் ஆலயத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. படம்: டுவிட்டர்/ அமித் ஷா -
Google News Preferred Icon

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்ம ராம்பா மல்லிகார்ஜுனா சுவாமி கோயிலில் வியாழக்கிழமை அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.

ஹைதராபாத்திலிருந்து ஹெலி காப்டர் மூலம் ஸ்ரீசைலத்துக்கு வந்த அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆந்திரா அறநிலையத் துறை அமைச்சர் வெல்லம்பள்ளி ஸ்ரீநிவாச ராவ், மக்களவை எம்பி பிரம்மானந்த ராவ், கர்னூல் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. கோடீஸ்வர ராவ் உள்ளிட்டவர்கள் திரு அமித் ஷாவை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கோயிலில் அவரது குடும் பத்துக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோயில் வளாகத்திலேயே மரக்கன்று ஒன்றை அவர் நட்டார். டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளப்பத்துக்கும் வேண்டிக் கொண்ட தாக திரு அமித் ஷா தெரிவித் திருந்தார்.

12 ஜோதிர்லிங்க திருத்தலங் களில் ஸ்ரீசைலமும் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஆந்திரா வில் உள்ள ஒரே சிவாலயம் இது.