110 குழந்தைகளுக்கு தொற்றுப் பாதிப்பு

110 குழந்தைகளுக்கு தொற்றுப் பாதிப்பு

1 mins read
88bb17b0-612a-46cf-b076-478068d221bc
-

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 110 குழந்தைகளுக்கு கொரோனா கிருமி தொற்றி உள்ளது.

எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 158,935 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,933 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

அவர்களில் 110 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 276 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 236 பேருக்கும் சென்னையில் 211 பேருக்கும் கிருமி தொற்றியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34,462 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கிடையே ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு 50 விழுக்காடு அளவில் பாடங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.