திருமண ஆசை காட்டி 50 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளையர் கைது

திருமண ஆசை காட்டி 50 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளையர் கைது

1 mins read
c670676b-36fe-471f-903e-3d0a0c0cdcc3
-

சென்னை: திரு­மண தக­வல் மையம் மூலம் ஏரா­ள­மான பெண்­களை திரு­மண ஆசை காட்டி ஏமாற்றி பாலி­யல் வன்­கொ­டுமை செய்து பண மோசடி­யி­லும் ஈடு­பட்ட இளை­யர் கைது செய்­யப்­பட்­டார்.

பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த 25 வய­தான சூர்யா, தம்மை பொறி­யி­யல் பட்­ட­தாரி என்று குறிப்­பிட்டு, திரு­மண தக­வல் மையத்­தில் பெய­ரைப் பதிவு செய்­துள்­ளார்.

இதே போல் தக­வல்­க­ளைப் பதிவு செய்­துள்ள இளம் பெண்­களைத் தொடர்புகொண்டு பேசு­வது அவ­ரது வழக்­கம். பின்­னர் அவர்­க­ளி­டம் ஆசை வார்த்­தை­கள் கூறி, திரு­ம­ணம் செய்து பணம் பறித்­துள்­ளார்.

சென்­னை­யைச் சேர்ந்த 22 வய­தான வைதேகி என்ற பெண்ணை தனது வலை­யில் விழ­வைத்த சூர்யா, அவரை ஏமாற்றி ஒரு விடு­திக்கு அழைத்­துச் சென்று உல்­லாச­மாக இருந்­துள்­ளார்.

மேலும், அதை காணொ­ளி­யாகப் பதிவு செய்து வைதே­கியை மிரட்டி உள்­ளார். அப்­பெண்­ணின் பெற்­றோரை ஏமாற்றி ஏழு லட்­சம் ரூபாய் பணத்தைப் பறித்து தலை­ம­றை­வான அவர் மீது வைதேகி புகார் அளிக்க, சூர்யா போலி­சில் சிக்க நேர்ந்­தது.

கோவை­யில் வேறொரு பெண்­ணு­டன் தங்­கி­யி­ருந்த போது போலி­சார் அவரை கண்­டு­பி­டித்து கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யின்­போது, அவர் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட பெண்­களை தமது வலை­யில் சிக்க வைத்து லட்­சக்­க­ணக்­கில் பண­மும் நகை­களும் பறித்­தது தெரியவந்­துள்­ளது.