கொள்கலன் கண்டெடுப்பு

கொள்கலன் கண்டெடுப்பு

1 mins read
dcfb3c3a-de10-49d3-9176-6621bf8b86c9
-
Google News Preferred Icon

புதுக்கோட்டை: கொற்கையில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து வரும் அகழாய்வுப் பணியின்போது மூன்று அடி உயரமுள்ள தானிய சேமிப்புக் கொள்கலன் (படம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உணவு தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கொள்கலனை இன்னும் திறந்து பார்க்கவில்லை என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"கொற்கை பகுதி பாண்டிய மன்னனின் தலைநகராகவும் துறைமுகமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிபத் தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான பொருள்கள், முந்தைய அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்டன.

"இந்நிலையில் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் கொள்கலன் கிடைத்துள்ளது," என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.