சென்னை: நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
பல்வேறு பயிா்களில் இயற்கை வேளாண்மை தொடா்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு கோவையில் வளங்குன்றா வேளாண்மைக்கான துறை இயங்கி வருகிறது.
அது மேம்படுத்தப்பட்டு 'நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' எனப் பெயா் மாற்றம் செய்யப்படும் என்றும் முதல்கட்டமாக மூன்று கோடி ரூபாய் மாநில அரசு நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மையமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

