இயல், இசை, நாடக மன்ற தலைவரானார் சந்திரசேகர்

இயல், இசை, நாடக மன்ற தலைவரானார் சந்திரசேகர்

1 mins read
14f9ae33-e21d-4286-9937-f95f567e8888
-

சென்னை: தமிழ்­நாடு இயல், இசை, நாடக மன்­றத்­தின் தலை­வ­ராக நடி­கர் வாகை சந்­தி­ர­சே­கர் (படம்) நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

மேலும், தமிழ்­நாடு நாட்­டுப்­புறக் கலை­ஞர்­கள் நல­வா­ரி­யத்­தின் தலை­வர் பொறுப்­பை­யும் அவரே வகிப்­பார் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

"வாகை சந்­தி­ர­சே­கர், தமிழ்த் திரைப்­ப­டத் துறை­யில் தனது குணச்­சித்­திர நடிப்­பால் தனக்­கென தனி இடத்­தைப் பெற்­றி­ருந்த கார­ணத்­தால், இவ­ரது நடிப்­பாற்­ற­லைப் பாராட்டி, 1991ஆம் ஆண்டு, 'கலை­மா­மணி விருது'' வழங்­கிச் சிறப்­பித்­தார் அன்­றையை முதல்­வர் கரு­ணா­நிதி.

"மேலும், 2003ஆம் ஆண்டு மத்­திய அர­சால் வழங்­கப்­படும் சிறந்த நடி­க­ருக்­கான தேசிய விருது' உள்­ளிட்ட பல்­வேறு விரு­து­க­ளைப் பெற்­ற­வர் வாகை சந்­தி­ர­சே­கர்," என்று முதல்­வர் ஸ்டா­லின் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஏற்­கெ­னவே கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை, தமிழ்­நாடு இயல், இசை, நாடக மன்­றத்­தின் உறுப்­பி­னர் செய­ல­ரா­கப் பதவி வகித்­துள்­ளார் வாகை சந்­தி­ர­சே­கர்.

மேலும், வேளச்­சேரி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் 2016 முதல் 2021 வரை பொறுப்பு வகித்­துள்­ளார்.