வேலூர்: வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியபோது, "உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். பாஜக ஆட்சியில் அமர்வதற்காகவே அரசியலில் இறங்கி உள்ளோம்.
"முதல்வர் ஸ்டாலின் நன்றாக கனவு காண்கிறார். இந்தியாவின் துணை பிரதமராகத் தான் ஆவதுடன், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்கவும் அவர் காய் நகர்த்தி வருகிறார். எனினும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 450 இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதி," என்று சொன்னார்.

