சென்னை: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. ஆனால், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் எங்களது கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் (படம்) தெரிவித்து உள்ளார்.
"நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகத் தான் உள்ளோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இருக்காது. தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து தந்தி தொலைக் காட்சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், "வரவு செலவுத் திட்டத்தில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. எதிர்க்கட்சியாக அதிமுக இன்னமும் சிறப்பாகவும், விவேக மாகவும் செயல்பட வேண்டும். ேவளாண் துறைக்கான தனி பட்ஜெட்டுக்காக தமிழக அரசை எத்தனை முறை வேண்டும் என்றாலும் மனம்திறந்து பாராட்டலாம். பாமக-அதிமுக உறவு விரிசல் இன்றி சுமூகமாக செல்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராம தாஸ் அறிவிக்கப்பட்டார். இருப்பி னும், அந்தத் தேர்தலில் அன்பு மணி உள்பட பாமகவினர் யாரும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்து போட்டி யிட்ட நிலையில், அடுத்த தேர்த லில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாமகவின் இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக்கப்பட வேண்டும். மாற்றம், முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் என்பது நிறைவேற வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

