நடிகையுடன் அவரது ஆண் நண்பரும் கைது

நடிகையுடன் அவரது ஆண் நண்பரும் கைது

1 mins read
d451e518-bf39-411f-93d9-cf6513149a7d
நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி, புழல் சிறையில் அடைத்த போலிசார். படம்: ஊடகம் -

சென்னை: அண்­மை­யில் பட்­டி­ய­லி­னத்­த­வர்­கள் குறித்து அவ­தூ­றா­கப் பேசி, டுவிட்­ட­ரில் காெணாளி வெளி­யிட்­ட­தாக நடிகை மீரா மிதுன் மீது விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சியைச் சேர்ந்த வன்­னி­ய­ரசு என்­ப­வர் சென்னை போலிஸ் ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­தார்.

இதை­ய­டுத்து, கேரள மாநி­லம், ஆலப்­பு­ழா­வில் பண்ணை வீட்­டில் பதுங்கி இருந்த மீரா மிதுனை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலி­சார் நேற்று முன்­தி­னம் கைது செய்த னர். அவரை சைதாப்­பேட்டை நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி 27ஆம் தேதி வரை புழல் சிறை­யில் அடைத்­த­னர்.

மீரா மிது­ன் காெணாளியை வெளியிட உறு­து­ணை­யாக இருந்ததாக அவ­ரது காத­லர் சென்னை அம்­பத்­தூ­ரைச் சேர்ந்த ஷாம் அபி­ஷேக், 26, என்­ப­வ­ரை­யும் மத்­திய குற்­றப் பிரிவு போலி­சார் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.