ஸ்டெர்லைட் ஆலையை மூட கமல்ஹாசன் வலியுறுத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூட கமல்ஹாசன் வலியுறுத்து

1 mins read
9dab5b8f-ed95-4de2-9c96-e6f0ed0e24d4
-

சென்னை: திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் உறுதி அளித்துள்ளபடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடி யாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், "நேற்று 16ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்று வதற்கான சிறப்புத் தீர்மானத்தை இயற்றவேண்டும்.

"இந்த தீர்மான நகல் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்," என்று கமல்ஹாசன் கேட்டுக் ெகாண்டுள்ளார்.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் அனுபவித்த துயரங்கள் யாவரும் அறிந்ததே. எதிர்வரும் சந்ததிகளையும் பாதிக்கும் அள விற்கு தீயவிளைவுகள் அங்கே நிகழ்ந்துவிட்டன.

இந்த ஆலையிலிருந்து 82 முறை விஷவாயு கசிந்ததாக தமிழக அரசு குற்றம் சாட்டியதும் விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழலைச் சீரழித்திருப்ப தாக உச்ச நீதிமன்றமே கண்டித்து ரூ.100 கோடி அபராதம் விதித்ததும் வரலாறு. கடந்த ஓராண்டாகத்தான் தூத்துக்குடி மக்கள் விஷக்காற்றை சுவாசிப்பது ஓரளவு குறைந்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.