இறைவனை கசிந்துருகிப் பாடும் பணியில் முதல் பெண் ஓதுவார்

இறைவனை கசிந்துருகிப் பாடும் பணியில் முதல் பெண் ஓதுவார்

2 mins read
54a661bd-d601-4571-947f-eb30699b865e
கோவி­லில் இறை­வனை நினைத்து கசிந்­து­ருகிப் பாடும் சுஹாஞ்­சனா. படம்: ஊடகம் -

தாம்­ப­ரம்: அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற அர­சா­ணையைத் தமி­ழக அரசு வெளி­யிட்டு இருப்­ப­தைத் தொடர்ந்து, தமி­ழ­கத்­தின் முதல் பெண் ஓது­வா­ரான சுஹாஞ்­சனா, 28, சென்னை மாடம்­பாக்­கம் தேனு­பு­ரீஸ்­வ­ரர் கோயி­லில் தனது பணி­யைத் தொடங்­கி­னார்.

மொத்­தம் 216 பேருக்கு பணி நிய­மன ஆணை­களை முதல்­வர் வழங்­கி­னார். இவர்களில் சுஹாஞ்­சனா மட்­டும் பெண் என்­ப­தால் அவ­ருக்கு பல­ரும் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

கோவி­லில் இவர் பாடும் காெணாளி, சமூக வலைத்­த­ளங்­களில் அதி­களவில் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

தாம்­ப­ரத்தை அடுத்த சேலை­யூர் ஐஏ­எப் சாலை­யில் கண­வர் கோபி­நாத், மகள் வன்­ஷிகா சக்­தி­யு­டன் வசித்து வரும் சுஹாஞ்­சனா, முதல் பெண் ஓது­வா­ராக நிய­மிக்­கப்­பட்­டது பற்றி கூறு­கை­யில், "எங்­க­ளது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலா­யு­தம்­பா­ளை­யம். நான் 10ஆம் வகுப்பை படித்து முடித்த பின்­னர் தேவா­ரம் பாடு­வ­தில் எனக்கு அதிக ஆர்­வம் ஏற்­பட்­டது. இைதய­டுத்து, இசைப்­பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது அதில் மிகுந்த ஈடு­பாடு கொண்­டேன்.

"பெண்­கள் பல துறை­களில் பயணம் செய்தா­லும் ஓது­வ­ாரா­க­வும் பணி­யாற்­ற­மு­டி­யும் என்­ப­தால் இதில் ஆர்­வ­த்துடன் சேர்ந்துள்­ளேன். கோவி­லில் இறை­வ­னுக்­கா­கப் பாடு­வது மன­துக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப் பணியை வழங்­கிய முதல்­வ­ருக்கு நன்றி," என்று கூறி­னார்.

அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற அர­சா­ணை­யின் அடிப்­ப­டை­யில், கோயில் அர்ச்­ச­கர் பயிற்­சிப் பள்­ளி­யில் பயின்று தேர்வு செய்­யப்­பட்ட அனைத்து சாதி­களைச் சேர்ந்த 24 அர்ச்­ச­கர்­கள், 20 ஓது­வார்­கள், பூசா­ரி­கள், பட்­டாச்­சா­ரி­யார்­கள் உட்­பட 216 பேருக்கு முத­ல்வர் பணி நிய­மன ஆணை­களை வழங்­கி­னார்.