18 மாவட்டங்களில் சராசரியை விடவும் கிருமி பாதிப்பு அதிகம்

18 மாவட்டங்களில் சராசரியை விடவும் கிருமி பாதிப்பு அதிகம்

1 mins read
f005d126-694b-4bbf-9533-b5f2d4c2b88e
-

சென்னை: தமி­ழ­கத்­தின் 18 மாவட்­டங்­களில் மாநில சரா­ச­ரியை­ வி­ட­வும் கிரு­மித்­தொற்று விகி­தம் அதி­க­மாக உள்­ள­தாக மருத்துவம், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை முதன்­மைச் செய­லா­ளர் ராதாகிருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

மதம் சார்ந்த கூட்­டங்­க­ள், குடும்ப நிகழ்­வு­க­ளி­ல் மக்­கள் அதி­க அளவில் ஒன்று சேர்­வ­தால்தான் கிரு­மிப் பர­வ­லும் அதி­க­மாகிறது என அவர் மேலும் கூறினார்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 1,896 பேருக்கு தொற்று உறுதியான நிலை­யில், கிருமி பாதிப்பால் 23 பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்களையும் சேர்த்து இதுவரை 34,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னை, ஓமந்­தூ­ரார் அரசு மருத்­து­வ­ம­னை­யில் ராதாகிருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசியபோது, "தமி­ழ­கத்­தில் 30 மாவட்­டங்­களில் தொற்று எண்­ணிக்கை 100க்கும் குறை­வா­கத்­தான் உள்­ளது. தமி­ழ­கத்­தில் தொற்று விகி­தம் 1.2% ஆக உள்­ளது. கோயம்­புத்­தூ­ரில் 2%, தஞ்சாவூரில் 2%, அரி­ய­லூ­ரில் 1.9% என 18 மாவட்­டங்­களில் மாநில சரா­ச­ரியை விட தொற்று விகி­தம் அதி­க­மாக உள்ளது. தொற்று அதிகரிக்கும் மாவட் டங்களில் நோய்த் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள் ளோம்," என்று கூறி­யுள்­ளார்.