சென்னை: தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தபடியே இல்லத்தரசி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளதாக தினகரன் நாளிதழ் தகவல் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது, வேளாண் வரவு செலவுத் திட்டம் மீதான பொது விவாதம் தொடங்கியது.
நிதிநிலை அறிக்கைகள் மீது கடந்த 16ஆம் தேதி தொடங்கிய விவாதம் வரும் 19ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பொது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, "அனைத்து இல்லத் தலைவிகளுக்கும் ரூ.1,000 மாதம்தோறும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப் படும் என்று சொல்வது எந்த விதத்தில் பொருந்தும்?" என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் கண்டிப்பாக விரைவில் செயல்படுத்துவார்," என கூறினார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தமிழக அரசின் காகித மில்லா வரவுசெலவுத் திட்டத்தை வரவேற்றதுடன், பட்ஜெட் புத்தகங்களும் அச்சிடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பேரவையில் வைக்கப்படும் புத்தகங் களில் 70% புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்வதில்லை. அவை வீணாக பழைய பேப்பர் கடைக்குச் செல்கிறது. தேைவப்படுவோர் தலைமைச் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

