செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9b2e817c-cdbe-48aa-b54a-9ee080e8f675
-

தங்க நகைக்கடனைத் தள்ளுபடி செய்யும்படி பெண்கள் போராட்டம்

தாங்கள் வாங்கிய தங்க நகைக்கடனைத் தள்ளுபடி செய்யும்படி போராட்டம் நடத்திய பெண்கள். படம்: ஊடகம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்க நகைக்கடன் பெற்றுள்ள நிலையில், தங்களது நகைக்கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெண்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான உரிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என கூட்டுறவு சங்க அதிகாரிகள் விளக்கம் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் போலிசார் போராட்டம் நடத்திய பெண்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பிரேமலதா: திமுகவின் 100 நாள் ஆட்சி நடுநிலையுடன் உள்ளது

சென்னை: திமுக கடந்த 100 நாள்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்துள்ள முறை நன்றாகவும் நடுநிலையுடனும் உள்ளதாக தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இணையாமல் அமமுகவுடன் கைகோத்த தேமுதிக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.3.79 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் ரூ.3.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில், வருங்காலத்தில் மூன்றாவது அலை வந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகளை மாநகராட்சி வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை களில் அலட்சியம் காட்டுவோர் மீதான நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி 8,047 நிறுவனங்களிடம் இருந்தும் 46,755 நபர்களிடமிருந்தும் ரூ.3.79 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.