ரூ.13 லட்சம் ரொக்கம், குத்தகை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின வெற்றிவேல் வீட்டில் ேசாதனை

ரூ.13 லட்சம் ரொக்கம், குத்தகை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின வெற்றிவேல் வீட்டில் ேசாதனை

2 mins read
ffa7b390-0737-49ef-8c43-0c3d0b0f3946
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் (நடுவில்) உதவியாளராகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு (வலக்கோடி) நெருக்கமானவராகவும் இருந்துள்ளார் அதிமுக பிரமுகர் வெற்றிவேல். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 3

சென்னை: அதி­முக நிர்­வா­கி­யும் சென்னை மாந­க­ராட்சி ஒப்­பந்த தார­ரு­மான வெற்­றி­வேல் என்­ப­வ­ரது வீட்­டில் லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சார் நேற்று விடிய விடிய 12 மணி நேரத்­திற்­கும் மேலாக திடீர் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

இச்­சோ­த­னை­யின்­போது ஏறக் குறைய ரூ.13 லட்­சம் ரொக்­கப் பணம், குத்­தகை முறை­கே­டு­கள் தொடர்­பான பல்­வேறு முக்­கிய ஆவ ணங்­கள் கைப்­பற்­றப்­பட்டு உள்­ள­தாக இந்து தமிழ்திசை ஊடகத் தக­வல்­கள் தெரி­விக்கின்றன.

இந்த ஆவ­ணங்­களை முறை­யாக ஆய்வு செய்­த­ பின்­னர், வெற்றி ேவலுக்கு அழைப்­பாணை அனுப்பி அவ­ரி­டம் மேலும் தீவிர விசா­ரணை நடத்த திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­க­வும் லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார் கூறி­யுள்­ள­னர்.

சென்னை எம்­ஜி­ஆர் நக­ரில் உள்ள வெற்­றி­வே­லுக்கு சொந்­த­மான வீட்­டு­டன் இச்சோதனை நடவடிக்­கை­கள் முடிந்­து­வி­ட வில்லை. எம்­ஜி­ஆர் நகர், சூளைப்­பள்­ளம் இல்­லத்­தில் வசிக்­கும் ெவற்றி­வேலின் தந்தை துலுக்­கானந்­தம் வீட்­டி­லும் டிஎஸ்பி தலை­மை­யி­லான போலி­சார் சோத­னையைத் தொடர்ந்து வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்டுள்ளன.

அதி­மு­க­வின் இளை­ஞர் மற்­றும் இளம்­பெண்­கள் பாச­றை­யின் துணைச் செய­லா­ள­ராக இருந்து வரும் வெற்­றி­வேல், இது­வரை மாந­க­ராட்சி ஏலக் குத்­த­கை­கள் தொடர்பில் எத்­தனை ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றுள்­ளார்? அவற்­றில் விதி­மு­றை­களை மீறி முறை­கேட்­டில் ஈடு­பட்­டுள்­ளாரா? என்­பன உள்­ளிட்ட சந்தேகங்கள் குறித்­தும் சோதனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

குறிப்­பாக, ரூ.346 கோடி மதிப்பி லான ஏலக் குத்­த­கை­ தொடர்பில் வெற்றிவேல் சம்பந்தப்பட்ட ஆவ­ணங்­களை வைத்து லஞ்ச ஒழிப்­புத்­ துறை போலிசார் விசா­ர­ணை­நடத்தி ­உள்­ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக பிரமுகர்களைக் குறி வைத்து சோதனை தொடர்கிறது.

கடந்த ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ் கருக்குச் சொந்தமான 21 இடங் களில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டனர்.

வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணிக்­குச் சொந்­த­மான 60 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார் கடந்த 10ஆம் தேதி சோதனை நடத்­தி­னர். இங்கு கிடைத்த ஆவ­ணங்­க­ளின் அடிப்­படை­யில் வெற்றி­வேல் வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ளது.