ெசப்டம்பர் 13ல் மாநிலங்களவைத் தேர்தல்

ெசப்டம்பர் 13ல் மாநிலங்களவைத் தேர்தல்

1 mins read
d8f40e2e-a2b5-4e56-95fb-3a2d07364b0d
-

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக எம்.பி.யாக இருந்த முகமது ஜான் மறைவை அடுத்து அந்த இடம் காலியானதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடையும்.