எடப்பாடி பழனிசாமி: வழக்குப்பதிவு செய்து மிரட்டப் பார்க்கிறது திமுக

எடப்பாடி பழனிசாமி: வழக்குப்பதிவு செய்து மிரட்டப் பார்க்கிறது திமுக

2 mins read
da2c93c1-003b-4c24-9284-72d1488f7379
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். படம்: ஊடகம் -

'கோடநாடு கொலை வழக்கில் என்னைச் சிக்க வைக்க சதி'

சென்னை: காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்குச் சொந்­த­மான கோட­நாடு வீட்டில் நிகழ்ந்த கொலை, கொள்­ளைச் சம்­பவம் தொடர்­பான வழக்­கில் தம்மைச் சிக்க வைக்க திமுக அரசு சதி செய்­வ­தாக சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

அக்­கு­றிப்­பிட்ட வழக்கு விசா­ரணை இறு­திக்­கட்­டத்­துக்கு வந்­துள்ள நிலை­யில், அதி­முக தலை­வர்­கள்மீது வழக்­குப்­ப­திவு செய்து திமுக அரசு அச்­சு­றுத்­தப் பார்ப்பதாக நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

எனினும் இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஜெய­ல­லி­தா­வின் மறை­வுக்­குப் பிறகு கோட­நாட்­டில் உள்ள அவ­ரது வீட்­டுக்­குள் சிலர் புகுந்து கொள்­ளை­ய­டித்­த­னர். அப்­போது அங்­கி­ருந்த காவ­லாளி கொலை செய்­யப்­பட்­டார். இது தொடர்­பாக கூலிப்­ப­டை­யைச் சேர்ந்த சயன் என்­ப­வர் உட்­பட சிலர் கைதாகினர்.

கோட­நாடு வீட்­டில் இருந்து சில முக்­கிய ஆவ­ணங்­க­ளைக் கைப்­பற்ற முயற்சி நடந்­த­தாக அப்­போது பர­பரப்பு ஏற்­பட்­டது. இது தொடர்­பான வழக்கு நீதி­மன்ற விசா­ர­ணை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில் குற்­றம்­சாட்­டப்­பட்ட சய­னி­டம் தமி­ழ­கக் காவல்­துறை மீண்­டும் வி்சாரணை நடத்­தி­ய­தா­க­வும் அவர் அளித்துள்ள ரக­சிய வாக்­கு­மூ­லத்­தில் பல முக்­கிய பிர­மு­கர்­க­ளைப் பற்றி குறிப்­பிட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கம் ஒன்றில் செய்தி வெளி­யா­னது.

இத­னால் அதி­முக தலைமை கடும் கொந்­த­ளிப்­பில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதி­முக தலை­வர்­களைப் பழி­வாங்­கும் நோக்­கத்­து­டன் திமுக அரசு செயல்­ப­டு­வ­தாக எடப்­பாடி பழ­னி­சாமி சாடி­யுள்­ளார்.

நேற்று காலை சட்­டப்­பே­ரவை கூடி­ய­தும், கோட­நாடு விவ­கா­ரம் தொடர்­பாக பேச அதி­முக உறுப்­பினர்­கள் வலி­யு­றுத்­தி­னர். ஆனால் சபா­நா­ய­கர் அனு­மதி தர மறுத்­தார்.

இத­னால் அதி­மு­க­வி­னர் அமளி­யில் ஈடு­பட்­ட­னர். சிலமுறை எச்­ச­ரிக்கை விடுத்த சபா­நா­ய­கர், பின்­னர் அம­ளி­யில் ஈடு­பட்­ட­வர்­களை அவை­யில் இருந்து வெளி­யேற்­று­மாறு அவைக்­கா­வ­லர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார். எனி­னும் பேர­வைக்கு வெளி­யி­லும் அதி­மு­க­வி­னர் தரை­யில் அமர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய எதிர்­கட்­சித் தலை­வர் பழனி­சாமி, கோட­நாடு கொலை தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வரும் வழக்கு முடி­யும் தறு­வா­யில் உள்­ளது என்­றும் இந்­நி­லை­யில் தம்­மை­யும் அதி­மு­க­வி­னர் சில­ரை­யும் இந்த வழக்­கில் சேர்த்­துள்­ள­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­கி­இ­ருக்­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

"திமுக அர­சின் இத்­த­கைய போக்கை அதி­முக வன்­மை­யா­கக் கண்­டிக்­கிறது. முக்­கிய சாட்­சி­கள் விசா­ரிக்­கப்­பட்டு, எதிர்­வ­ரும் 27ஆம் தேதி வழக்கு விசா­ர­ணைக்கு வரும் சூழ­லில் திமுக அரசு புதி­தாக வழக்­குப்பதிவு செய்து அச்­சு­றுத்தப் பார்க்­கிறது.

"அதி­முக அரசு நியா­ய­மான முறை­யில் இந்த வழக்கை விசா­ரித்­தது. கோட­நாடு குற்­ற­வா­ளி­களைக் காப்­பாற்ற கடந்த காலங்­களில் திமுக முயன்றதை யாரும் மறக்க முடி­யாது," என்றார் பழனிசாமி.