ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்பை ஆராய நிபுணர் குழு

ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்பை ஆராய நிபுணர் குழு

1 mins read
8fa62798-c921-4361-9db0-20fed141d706
-

சென்னை: காவிரி டெல்டா பகுதி­களில் ஹைட்ரோகார்­பன் திட்­டத்­தால் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் குறித்து ஆராய தமி­ழக அரசு சார்­பில் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அர­சின் இந்த நட­வ­டிக்­கையை சமூக ஆர்­வ­லர்­களும் அந்­தத் திட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­வர்­களும் வர­வேற்­றுள்­ள­னர்.

தமிழ்­நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழு­வின் பகு­தி­நேர உறுப்­பி­ன­ரான பேரா­சி­ரி­யர் சுல்­தான் அக­மது இஸ்­மா­யில் தலை­மை­யில் இந்­தக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. பேரா­சி­ரி­யர்­கள் இந்­து­மதி எம்.நம்பி, மகேஷ்­வரி, திருச்சி மண்­டல நீர்­வளத் தலைமைப் பொறி­யா­ளர் ராம­மூர்த்தி, டிட்கோ நிறு­வ­னத்­தின் பொது மேலா­ளர் கார்த்­தி­கே­யன் ஆகிய ஆறு பேர் நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­னர்­களாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

ஹைட்ரோகார்­பன் திட்­டத்­துக்கு டெல்டா பகுதி விவ­சா­யி­கள் தொடக்­கம் முதலே கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர். இது தொடர்­பாக டெல்டா மாவட்­டங்­களில் தொடர் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன.

எனி­னும் சில பகு­தி­களில் இந்­தத் திட்­டத்­துக்­கான பணி­கள் தொடங்­கப்­பட்­டன. இந்­நி­லை­யில், ஹைட்­ரோ­கா­ர்­பன் திட்­டத்­தால் டெல்டா பகு­தி­களில் நிலத்­தடி நீர், மண்­வ­ளம், நீர்ப்பா­சன ஆதாரங்­கள், பயிர்­க­ளின் சாகு­படி, காற்­றின் தரம் ஆகி­யவை எந்த அளவு பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை ஆராய பல்­வேறு நிபு­ணர்­கள் அடங்­கிய குழு அமைக்­கப்­படும் என அர­சுத் தரப்­பில் அண்­மை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி ஏழு பேர் கொண்ட குழு மீத்­தேன், ஷெல் எரி­வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய அனைத்­து­வித பாதிப்­பு­கள் குறித்­தும் ஆய்வு மேற்­கொண்டு, அடுத்த நான்கு மாதங்­க­ளுக்­குள் அர­சுக்கு அறிக்கை அளிக்க உள்­ளது.