ஆதாரம் இருந்தால் உடனடி நடவடிக்கை: முதல்வர் உறுதி

ஆதாரம் இருந்தால் உடனடி நடவடிக்கை: முதல்வர் உறுதி

1 mins read
a67c34fa-edbc-4473-955e-9955a89d899f
-
Google News Preferred Icon

சென்னை: தமிழக கோவில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் யாரையும் நீக்கவில்லை என்றும் அவர்கள் பணியாற்றிய இடத்தில் புதியவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவ்வாறு எங்கேனும் நடந்திருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.

'அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்' என்ற சட்­டத்தை சீர்­கு­லைக்க சிலர் முயற்சி செய்­வ­தா­க­வும் முதல்­வர் சாடி­னார்.