ஆளுநரைச் சந்தித்து அதிமுகவினர் முறையீடு

2 mins read
4ac5dd52-a14a-4c6c-92ab-51fc17a64ab8
ஆளுநரைச் சந்தித்து திமுக ஆட்சி மீது புகார் அளித்த அதிமுக தலைவர்கள். படம்: மாலை மலர் -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் அடிக்கடி ஓய்வு எடுக்கும் கோடநாடு எஸ்டேட் தொடர் பிலான கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.

சென்னை: கோடநாடு எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வேளையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சயான் செவ்வாய்க் கிழமை போலிஸ் விசாரணையில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்போது முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலை வருமான எடப்பாடி பழனிசாமியிடம் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களைக் கொடுத்ததாக அவர் போலிசிடம் கூறியதாக தகவல் வெளியானது.

இது பற்றிய தகவல்களை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த விவகாரத்தை சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி எழுப்ப முயற்சி செய்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி வழங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதர வாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திட்ட மிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். கோடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க சதி செய்கிறார்கள்,'' என்று திமுக அரசு மீது குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய அ.தி.மு.க. உறுப்பினர் களுடன் நேற்று ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்துப் பேசினர்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்த அவர்கள், திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனி சாமி, "திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து உள்ளது. ஆளுங்கட்சி உறுப் பினர்கள் பாக்கெட்டை நிரப்புவதி லேயே மும்முரமாக இருக்கிறார்கள். கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்த முடியாமல் அரசு அதை மறைப்பதற்காக அதிமுக நிர் வாகிகள் மீது தொடர்ந்து பொய்யான வழக்குகளைப் போட்டு வருகிறது," என்றார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பில் சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "என் அப்பன் குதிருக்குள் இல்லை எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்," என்றார்.

"நள்ளிரவில் நடந்த கொள்ளை சம்பவம், அடுத்தடுத்து நடந்த மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை மக்களுக்கு சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி செய்கிறோம்," என்று மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.