தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருவருக்கு நல்லாசிரியர் விருது

1 mins read
87081634-d016-4825-b2fe-45aba44a1ec3
-

சென்னை: மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து 105 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் தேசிய விருதுக்கு தேர்வான 44 பேர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழ கத்தைச் சேர்ந்த இரண்டு தலைமை ஆசிரியைகள் தேர்வாகியுள்ளனர். திருச்சி மணிகண்டம், பிராட்டியூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு, மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர் அவர்கள் இருவர்.