முகக்கவசம் அணியாத 1,278 பேருக்கு அபராதம்

முகக்கவசம் அணியாத 1,278 பேருக்கு அபராதம்

2 mins read
09bacebc-dbfa-4e8c-9861-1d836033b845
-

சென்னை: சென்­னை­யில் முகக் கவ­சம் அணி­யாத 1,278 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை பெரு­ந­கர மாநகராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­களில் கொரோனா பர­வலைத் தடுக்­கும் வித­மாக முகக்கவ­சம் அணி­யாத வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க மண்­டல அம­லாக்க குழு­வி­ன­ரால் தீவிர கண்­கா­ணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்­டுள்­ளது. அந்த வகை­யில் முகக்கவ­சம் அணி­யா­த­வர் ­க­ளுக்கு அப­ராதம் விதிக்­கப்­ப­டு­கிறது.

சென்ற 16ஆம் தேதி ஒரு­நாள் மட்­டும் சென்­னை­யில் முகக்கவ­சம் அணி­யாத 1,278 தனி­ந­பர்­க­ளி­டம் இருந்து ரூ.2 லட்­சத்து 55 ஆயி­ரத்து 600 அப­ரா­தம் வசூ­லிக்­கப்­பட்­டது. மேலும் அதே தேதி­யில் நடைபெற்ற ஏழு பொது மற்­றும் தனி­யார் நிகழ்ச்­சி­யில் பாது­காப்பு நடை­முறைகளைக் கடைப்­பி­டிக்­கா­த­தால் ரூ.26,600 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்­றும் பாது­காப்பு வழி­மு­றை­களைப் பின் பற்­றாத 48,033 தனி­ந­பர்­க­ளி­டம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்­சத்து 63 ஆயி­ரத்து 590 அப­ரா­த­மாக வசூ­லிக்­கப்­பட்­டது.

இதற்கிடையே கோவாக்­சின் முதல் தவணை தடுப்­பூசி போட்ட நான்கு லட்­சம் பேர், இரண்­டாம் தவணைக்காகக் காத்­தி­ருக்­கின்­ற­னர் என்று மக்­கள் நல்­வாழ்வுத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார். சென்னை, கிண்டி 'கிங்' கொரோனா சிகிச்சை அரசு மருத்துவ­மனைக்கு எஸ்.கே.சி.எஸ். நிறு­வ­னம் சார்­பில் ஐந்து லட்­சம் ரூபாய் மதிப்­பி­லான பேட்­டரி கார் வழங்­கப்­பட்ட நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர், தடுப்­பூசி கையி­ருப்பு குறைவு குறித்து மத்­திய அர­சி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தடுப்­பூசி கிடைத்­த­தும் காத்­தி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை கொடுத்து தடுப்­பூசி போடப்­படும் என்றும் கூறினார்.