'நிழல் இல்லா நாள்'

'நிழல் இல்லா நாள்'

1 mins read
712e2f7a-838d-475e-9231-8e0db8d3b164
-

சென்னை பிர்லா கோளரங்கத்தில் நேற்று 'நிழல் இல்லா நாளை' கடைப்பிடிக்கும் வகையில் மனிதச் சங்கிலி அமைத்து நின்றனர். சூரியக் கதிர்கள் செங்குத்தாக உள்ள பொருட்கள் மீது விழும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அதாவது நிழல் அந்தப் பொருளின் அடியிலேயே விழுந்து விடுவதால் கண் களுக்கு தென்படாது. இதனை 'நிழல் இல்லா நாள்' என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த அபூர்வம் நிகழ்கிறது. சென்னையில் ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நிழல் இல்லா நாள் நிகழ்ந்தது. நேற்று மதியம் 12.13 மணிக்கு சூரியன் நேர் உச்சிக்கு வந்தபோது சில நொடிகள் நிழல் இல்லாத காட்சி தென்பட்டதாக மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்க டேஸ்வரன் தெரிவித்தார். 'Zero Shadow Day-ZSD' என்ற கைபேசி செயலி மூலம் 'பூஜ்ஜிய நிழல் நாள்' எப்போது, எங்கு ஏற்படும் என்பதை அறியலாம்.