மதுரை ஆதீன மடம்: நித்யானந்தா 'காமெடி' செய்கிறார்

மதுரை ஆதீன மடம்: நித்யானந்தா 'காமெடி' செய்கிறார்

2 mins read
ce877975-9378-4a87-a04f-e222922c4ad0
மதுரை ஆதீனமாக பதவியேற்று விட்டேன் என்று அதிர டியாக அறிவித்த நித்யானந்தா. படம்: தமிழக ஊடகம் -

மதுரை: "அடுத்த ஆதீ­னம் நான்­தான்," என தன்­னைத்­தானே நித்­யா­னந்தா அறி­வித்­துள்­ளது 'காமெடி' என்று மதுரை ஆதீ­னம் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மதுரை ஆதி­ன­மாக இணை­யம் வழி­யாக பக்தர்களுக்கு ஆசீர்­வா­தம் செய்­யப்போவ­தாகவும் பேஸ்­புக் பதி­வில் நித்­யா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

மதுரை ஆதீ­னத்­தின் 292வது பீடா­­தி­ப­தி­யாக இருந்த அரு­ண­கி­ரி­நா­தர் உடல்­நலம் பாதிக்கப்பட்டு இம்­மா­தம் 13ஆம் தேதி இறந்­தார்.

அதற்கு முன்­ன­தா­கவே அறிக்கை வெளி­யிட்­டி­ருந்த நித்­யா­னந்தா, 2012ல் இளைய ஆதீ­ன­மாக தான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி­யி­ருந்­தார். இந்த விவ­கா­ரம் பெரும் சர்ச்­சை­யைக் கிளப்பியதால் இளைய ஆதீ­னம் பத­வி­யில் இருந்து நித்­யா­னந்­தாவை மதுரை ஆதீ­னம் நீக்­கி­னார்.

இது தொடர்­பான வழக்கு உயர் நீதி­மன்­றம் மதுரை கிளை­யில் நிலு­வை­யில் உள்­ளது.

இந்த நிலை­யில் 2019ல் சுந்­த­ர­மூர்த்தி என்­ப­வரை இளைய ஆதீ­ன­மாக அறி­வித்து அவ­ருக்கு ஹரி­ஹர தேசிக ஞானசம்­பந்த பர­மாச்­சா­ரிய சுவா­மி­கள் என அரு­ண­கிரி­ நா­தர் பெயர் சூட்­டி­னார்.

இவர், இம்­மா­தம் 23ஆம் தேதி மதுரை ஆதீ­ன­மாக பொறுப்­பேற்க உள்­ளார். அதற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்­றன.

இந்த நிலை­யில் "293வது பீடாதி­ ப­தி­யாக நான் பொறுப்­பேற்­றுக் கொண்­டேன். இனி என் பெயர் பக­வான் நித்­யா­னந்தா பர­ம­சிவ ஞான­சம்­பந்த தேசிக பரா­மாச்­சாரிய சுவா­மி­கள். இணை­யம் வழி­யாக ஆசீர்­வா­தம் வழங்­கப்­படும். இறந்த ஆதீ­னத்­தின் பெய­ரில் பல்­கலை அமைக்­கப்­படும்," என்று நித்­யா­னந்தா கூறி­ய­தாக விக­டன், தின ­ம­லர் உள்­ளிட்ட ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இது குறித்து மதுரை ஆதீன மடத்­தி­டம் கேட்­ட­போது, "ஆதீன மடத்­திற்­கும் நித்­யா­னந்­தா­வுக்கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை. நீதி­மன்­றத்­தில் வழக்கு நிலு­வை­யில் இருக்­கும்­போது இது­போன்று அறி­விப்­பது நீதி­மன்ற அவ­ம­திப்­பா­கும். அவர் மீது பெங்­க­ளூரு உள்­ளிட்ட நக­ரங்­களில் வழக்­கு­கள் உள்­ளன. அதி­லி­ருந்து தப்­பிக்­கவே ஏதோ ஓர் இடத்­தில் இருந்­து­கொண்டு அவர் 'காமெடி' செய்து வருகிறார்," என்று தெரிவித்தது.

"பிற ஆதீ­னங்­க­ளின் முன்னிலை யில் 293வது மதுரை ஆதீன மடத்­தின் பீடா­தி­ப­தி­யாக ஹரி­ஹர தேசிகர் 23ஆம் தேதி முறைப்­படி பொறுப்பு ஏற்­பார்," என்று மதுரை ஆதின மடம் மேலும் கூறியது.

இதற்கிடையே 293வது ஆதீன நிய­ம­னத்­திற்­கான நடைமுறைகள் ஏற்­கெ­னவே முடி­வுற்று 10 நாட்­கள் தொடர்ந்து குரு­பூஜை நடத்­தப்­பட்ட பின்­னர் பீடோ­க­ர­னம் என்­னும் பீடத்­தில் அம­ரும் நிகழ்வு நடை­பெ­ற­உள்­ளது. திரு­ஞா­ன­ சம்­பந்­தர் தோற்­று­வித்த 1,500 ஆண்டு பாரம்­ப­ரி­ய­முள்ள மதுரை ஆதீன மடத்­தில் 292வது ஆதீ­ன­மாக 1980இல் பொறுப்­பேற்று 40 ஆண்­டு­கள் மடா­தி­ப­தி­யாக விளங்­கிய அரு­ண­கி­ரி­நா­தர் இம்மாதம் 13ஆம் தேதி கால­மா­னார்.