தமிழகத்தில் கூடுதல் தளர்வு; மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வு; மு.க.ஸ்டாலின் ஆலோசனை

1 mins read
fcc287a5-fa55-453b-b4db-06044ac5f8b4
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்று படிப்­ப­டி­யாக குறைந்து வரு­வ­தால் கூடு­தல் தளர்­வு­கள் அறி­விப்­பது குறித்து முதல்­வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோ­சனை நடத்­த­வி­ருக்­கி­றார் என்று தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. தற்­போது அம­லில் இருக்­கும் தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு வரு­கின்ற 23ஆம் தேதி காலை 6 மணி­யோடு முடி­வ­டை­கிறது.

இந்த நிலை­யில் மேலும் தளர்­வு­கள் அளிப்­பது தொடர்­பாக இன்று சென்னை தலைமை செய­ல­கத்­தில் ஆலோ­சனை நடை­பெ­று­கிறது.

இதில் திரை­ய­ரங்­கு­கள் மற்­றும் பள்­ளி­கள் திறப்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

மருத்­துவ நிபு­ணர்­கள், அரசு உயர் அதி­கா­ரி­கள், தலை­மைச் செய­லா­ளர், சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் உட்­பட பலர் இக்­கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.