நிதியமைச்சர்: மத்திய அரசின் வருவாயை கூட்டிய தமிழகம்

2 mins read
d39d428e-df0d-404f-b72c-357268bfa2ba
-

ரூ.3 குறைப்பு காரணமாக நாளுக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிக விற்பனை

சென்னை: தமிழ்­நாட்­டில் பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு ரூ. 3 குறைக்­கப்­பட்டு இருப்­ப­தால் நாள்­தோ­றும் சரா­ச­ரி­யாக 11.29 லட்­சம் லிட்­டர் பெட்­ரோல் அதி­கம் விற்­ப­னை­யா­கிறது. இத­னால் நாள் ஒன்­றுக்கு மத்­திய அர­சுக்கு ரூ.3.55 கோடி அதிக வரு­வாய் கிடைக்­கிறது. இதே நிலை நீடித்­தால், ஆண்­டுக்கு ரூ. 1,200 கோடி அதிக வரு­வாய் மத்­திய அர­சுக்கு கிடைக்­கும்.

இதைச் சாதித்­துள்ள தமி­ழக அர­சுக்குப் பிர­த­மர் மோடி­யும் நிதி அமைச்­சர் நிர்­ம­லா­வும் நன்றி கூற வேண்­டும் என்று தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் புதிய அர­சாங்­கம் பெட்­ரோல் விலையை லிட்­ட­ருக்கு ரூ. 3 குறைத்து இருக்­கிறது.

ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக 9.19 மில்லியன் லிட்­டர் பெட்­ரோல் விற்­ப­னை­யா­னது. பெட்­ரோல் விலை குறைக்­கப்­பட்­ட­தும் ஆகஸ்ட் 14 முதல் நாள்­தோ­றும் சரா­ச­ரி­யாக 12% பெட்­ரோல் அதி­கம் விற்­ப­னை­யா­கிறது என்று அவர் கூறி­னார்.

இதே நிலை நீடிக்­கும் பட்­சத்­தில் மத்­திய அர­சுக்கு அதிக லாபம் கிட்­டும் என்று சட்­ட­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­த­போது அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, அடுத்த நிதி ஆண்டு முதல் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திற்கு முன்­ன­தாக மாநில அர­சாங்­கம் வரு­டாந்­திர பொரு­ளி­யல் ஆய்வு அறிக்­கையை வெளி­யி­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கடந்த 10 ஆண்­டு­கள் ஆட்சி புரிந்த அதி­முக அர­சாங்­கம் 110வது விதி­யின் கீழ் அறி­வித்த பல்­வேறு திட்­டங்­க­ளை­யும் புதிய அர­சாங்­கம் மறு­ப­ரி­சீ­லனை செய்­யும் என்­றும் நிதி அமைச்­சர் கூறி­னார்.

தமிழ்­நாட்­டின் நிதி நிலை­மையை நினைத்­தால் அச்­ச­மாக உள்­ளது என்­றும் பல அம்­சங்­களில் முடிவு எடுக்க முடி­யாத நிலை இருப்­ப­தா­க­வும் அவர் கவலை தெரி­வித்­தார்.