மக்கள்தொகை பெருக்கம்: 13வது இடத்தில் ஓசூர்

மக்கள்தொகை பெருக்கம்: 13வது இடத்தில் ஓசூர்

1 mins read
471ac518-d592-4600-8423-951e0f8ed778
-

சென்னை: தமிழ்­நாட்­டின் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் அமைந்­துள்ள ஓசூர் நக­ரம், உல­கி­லேயே ஆக அதிக வேகத்­தில் மக்­கள்­தொகை பெருக்­கம் இடம்­பெற்று வரும் நகர்­களில் 13வது இடத்­தில் உள்ளது.

அந்த நக­ரில் ஆண்­டுக்கு 5.38 விகி­தம் அள­வில் மக்­கள்­தொகை அதி­க­ரித்து வரு­கிறது என்று 'விசு­வல் கேப்­பிட்­ட­லிஸ்ட்' என்ற இணைய வெளி­யீட்டு அறிக்கை ஒன்று தெரி­விக்­கிறது.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்­கில் உலக மக்­கள்­தொகை 8.1 பில்­லி­யனை எட்­டும். ஆப்­பி­ரிக்­கா­விலும் ஆசி­யா­வி­லும் உள்ள பல நகர்­களி­லும்­தான் மக்­கள்­தொகை பெருக்­கம் அதி­க­ரிக்­கும் என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

ஐநா அமைப்­பின் புள்­ளி­விவரங்­களைப் பயன்­ப­டுத்தி 2020 முதல் 2025 வரை வரு­டாந்­திர சரா­சரி மக்­கள்­தொகை பெருக்­கம் எப்­படி இருக்­கும் என்­பதை 20 நக­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து அந்த அறிக்கை ஆராய்ந்­தது.

ஓசூ­ரில் 2011 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி ஏறத்­தாழ 1.10 லட்­சம் மக்­கள் வாழ்ந்து வந்­த­னர்.

2019ல் ஓசூரை தமி­ழக அரசு மாந­க­ராட்­சி­யாக மாற்­றி­யது. கடல்­மட்­டத்­துக்கு 3,000 அடி உய­ரத்­தில் உள்ள ஓசூர், இந்­தி­யா­வின் தலை­சி­றந்த தொழில்­துறை மைய­ம்.