செப்.1ல் பள்ளிகள் திறக்க முடிவு

செப்.1ல் பள்ளிகள் திறக்க முடிவு

2 mins read
38d8aef3-e0c3-43ea-b9a1-7f8050cecbaa
-

சென்னை: செப்­டம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து பள்­ளி­கள் திறக்க அரசு உறு­தி­யாக உள்­ளது என்று அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து நேற்று திருச்­சி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­னார்.

''இப்­போது வரை செப்­டம்­பர் 1ஆம் தேதி பள்­ளி­க­ளைத் திறப்­ப­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது. முதல்­வ­ரும் இதே கருத்­தைத்­தான் தெரி­வித்­துள்­ளார். பள்­ளி­க­ளைத் திறப்­ப­தற்கு தேவை­யான நிலை­யான வழி­காட்டு நெறி­மு­றை­கள் ஏற்­கெ­னவே சுகா­தா­ரத் துறை­யால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. நாங்­களும் அதை ஆய்வு செய்து, அதில் புதி­தாக எதை­யா­வது சேர்க்க வேண்­டுமா அல்­லது அதை அப்­ப­டியே பின்­பற்­ற­லாமா என்று யோசித்து வரு­கி­றோம்.

"வகுப்­பில் மாண­வர்­கள் இடை­வெளிவிட்டு உட்­கார வேண்­டும், முகக்­க­வ­சம் அணிய வேண்­டும், ஐம்­பது சத­வி­கித மாண­வர்­கள் மட்­டுமே சுழற்சி முறை­யில் பள்­ளிக்கு வர­வேண்­டும், அவர்­க­ளுக்­குத் தேவை­யான கிருமி நாசி­னி­கள் வழங்­கப்­பட வேண்­டும், பள்­ளி­கள் தயார் நிலை­யில் இருக்க வேண்­டும், ஆசி­ரி­யர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தடுப்­பூ­சி­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு வழி­காட்டு நெறி­மு­றை­கள் அந்­தந்த மாவட்ட முதன்­மைக் கல்வி அலு­வ­லர்­கள் மூலம் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

"அந்­தந்த மாவட்ட ஆட்­சி­ய­ரின் ஒத்­து­ழைப்­போடு பள்­ளி­கள் தயார்ப் ­படுத்­தப்­பட்டு வரு­கின்­றன. செப்­டம்­பர் 1ஆம் தேதி அன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­க­ளுக்­குப் பள்­ளி­க­ளைத் திறப்­ப­தில் எல்லா வகை­யி­லும் தயார் நிலை­யில் இருக்­கி­றோம்," என்று அமைச்­சர் கூறியதாக 'இந்து தமிழ் திசை' தெரிவித்தது.

"பணி நிரவல், கலந்தாய்வு ஆகியவை முடிந்த பிறகு ஆசிரியர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் தெரிவித்தார்.