சுங்கக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: ராமதாஸ் கடும் எதிர்ப்பு

சுங்கக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: ராமதாஸ் கடும் எதிர்ப்பு

2 mins read
b01a2239-520e-4765-9ded-0c98a80d86fb
-

சென்னை: சுங்கக் கட்­ட­ணங்­கள் உயர்த்துவதற்கு பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், சுங்­கக் கட்­டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் தேசிய நெடுஞ்­சா­லை­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 23 சுங்­கச்­சா­வ­டி­களில் வரும் செப்­டம்­பர் ஒன்­றாம் தேதி முதல் சுங்­கக் கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக தேசிய நெடுஞ்­சா­லைத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். குறைந்­த­பட்­சம் 8% கட்­ட­ணம் உயர்த்­தப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது. எந்­த­வி­த­மான வெளிப்­ படைத்­தன்­மை­யும் இல்­லா­மல் சுங்கக்­ கட்­ட­ணத்தை தொடர்ந்து உயர்த்­து­வது கண்­டிக்­கத்­தக்­கது.

"தமி­ழ­கத்­தில் ஒட்­டு­மொத்­த­மாக 48 சுங்­கச்­சா­வ­டி­கள் உள்­ளன. இந்­தி­யா­வில் அதிக எண்­ணிக்­கை­யில் சுங்­கச் சாவ­டி­க­ளைக் கொண்ட மாநி­லங்­களில் தமி­ழ­க­மும் ஒன்று.

"தமி­ழ­கத்­தி­லுள்ள 48 சுங்­கச்­சா­வ­டி­களில் கடந்த ஏப்­ரல் மாதத்­தில் 24 சுங்­கச் சாவ­டி­களில் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டது.

"அவை தவிர்த்து, மீத­முள்ள விக்­கி­ர­வாண்டி, ஓம­லூர், தரு­ம­புரி, சம­ய­பு­ரம் உள்­ளிட்ட 24 சுங்­கச்­சா­வ­டி­களில் செப்­டம்­பர் ஒன்­றாம் தேதி முதல் கட்­டண உயர்வு நடை­மு­றைக்கு வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

"சுங்­கக் கட்­டண உயர்வு ஆண்­டுக்கு ஒரு முறை உயர்த்­தப்­ப­டு­வது வழக்­க­மான ஒன்­று­தான்; இதில் புதி­தாக எது­வும் இல்லை என்று தேசிய நெடுஞ்­சா­லை­கள் ஆணை­யம் கூறி­யுள்­ளது. இது மக்­க­ளின் மன­நிலை, நாடும் நாட்டு மக்­களும் எதிர்­கொண்டு வரும் சூழல் ஆகி­ய­வற்றை பொருட்­ப­டுத்­தாத கருத்து ஆகும்.

"கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக அர­சின் பொரு­ளா­தா­ரம் முதல் அடித்­தட்டு மக்­க­ளின் பொரு­ளா­தார நிலை வரை அனைத்­தை­யும் நிலைகுலை­யச் செய்­தி­ருக்­கிறது. நெடுஞ்­சாலை சுங்­கக்­கட்­டண உயர்வு என்­பது காரில் பய­ணிக்­கும் பணக்­கா­ரர்­களை மட்­டும்தான் பாதிக்­கும் என்று கரு­தக்­கூ­டாது.

"சரக்­குந்­து­க­ளுக்கு கூடு­தல் சுங்­கக்­கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும் போது, அதன் விளை­வாக அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை கண்­டிப்­பாக உய­ரும். பேருந்­து­களுக்­கான சுங்­கக் கட்­ட­ணம் உயர்த்­தப்­படும்போது தனி­யார் பேருந்­து­க­ளின் கட்­ட­ணம் உட­னடி­யா­க­வும் அரசு பேருந்­து­க­ளின் கட்­ட­ணம் ஒரு சிறிய இடை­வெ­ளிக்­குப் பிற­கும் உயர்த்­தப்­படும். இத­னால் ஏழை­கள், நடுத்­தர மக்­கள் உள்­ளிட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ரும் கடு­மை­யாக பாதிக்­கப்­படுவர். அந்த வகை­யில், சுங்­கக்­கட்­டண உயர்வு அனைவரையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும் பாலானவை அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.

ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து நெடுஞ்

சலைகளிலும் முழுமையாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டு மின்றி, ஆண்டுக்கு ஆண்டு கட்டண உயர்வு செய்யப்படுவது மக்கள் மீது நடத்தப்படும் பொரு ளாதாரத் தாக்குதல் ஆகும். இதை ஏற்கவே முடியாது," என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.