சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைக்காட்சியில் வரும் செய்திகளைக் கேட்டபடி உடற்பயிற்சியில் ஈடுபடும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரு கின்றன.
திரு ஸ்டாலினுக்கு சைக்கிள் ஓட்டுவது விருப்பமான பயிற்சி யாகும். அதற்காக பிரத்யேக உடைகளை அணிந்து, தலையில் தலைக் கவசத்துடன் அவ்வப்போது சைக்கிளில் ஸ்டாலின் வலம் வருவது வழக்கம்.
அது பற்றிய புகைப்படங்கள் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனது வீட்டில் அமைத்துள்ள உடற்பயிற்சி கூடத் தில் அவர் பயிற்சி செய்யும் காணொளிகள் வெளியாகியுள்ளன.அனைத்து வகை நவீன உடற் பயிற்சி சாதனங்கள் அவரது உடற் பயிற்சி கூடத்தில் வைக்கப்பட்டு ள்ளன.
அங்கு சுவரில் தொலைக்காட்சியும் மாற்றப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டே அவர் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.
தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் மூன்று காணொளிகள் வெளியாகியுள்ளன.
இரு கைகளிலும் எடையுள்ள இரும்பு வட்டுகளை தூக்கிக்கொண்டு கால்கள் வளையாமல் உடலின் மேல்பகுதி மட்டும் குனிந்து நிமிரும் வகையிலான ஒரு உடற்பயிற்சியை செய்யக்கூடிய காட்சியை காணொளியில் பார்க்க முடிகிறது.
மற்றொரு காணொளியில் ஸ்டாலின் ஒரு இரும்புக் கம்பியை மேலே இருந்து கீழே இறக்கி மீண்டும் மேலே தூக்கி உடற்பயிற்சி செய்கிறார்.
இரும்புக்கம்பியின் மறுப்பக்கத்தில் இரும்பிலான எடை கொண்ட பொருள் தொங்க விடப்பட்டு இருக்கிறது. இது தோள்பட்டைக்கு வலுத் தரக்கூடிய ஒரு உடற்பயிற்சியாகும்.
முட்டி கால்கள் வளையாமல் திடமாக நின்றபடி கைகளை மட்டும் மேலே மேலே உயர்த்தி இந்த உடற்பயிற்சியை அவர் செய்கிறார்.
இதன் மூலம் அந்த உடற்பயிற்சியில் அவருக்கு நீண்ட அனுபவம் இருப்பது தெரியவருகிறது.
மூன்று காணொளிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

