கடற்கரை, திரையரங்குகளைத் திறக்க இன்று முதல் அனுமதி

கடற்கரை, திரையரங்குகளைத் திறக்க இன்று முதல் அனுமதி

2 mins read
4a0ebdb3-df46-4ef1-b7c8-e6c0edb8cf38
கடற்கரைகளுக்கு இன்றுமுதல் பொதுமக்கள் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் காற்று வாங்கும் மக்கள். கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

ஊரடங்கு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின்படி திரை யரங்குகள், கடற்கரைகள், பூங்காக்களை இன்று முதல் பொதுமக்களுக்குத் திறந்துவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வுக்கு பேருந்துகளை இயக்கவும் அரசு அனுமதித்துள்ளதாக 'புதிய தலைமுறை' ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

தளர்வுகள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நடப்பில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப் பாடுகள் இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் ேததி வரை இரு வாரம் நீட்டிக்கப்படுகிறது.

திரையரங்குகளுக்கு அனுமதி: 50% பார்வையாளர்களுடன் வழி காட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இன்றுமுதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரையரங்க ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும்.

கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு: இதுவரை இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனிமேல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்து: கர்நாடகா, ஆந்திராவுக்கு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள அதேநேரத்தில், கேரளாவுக்குப் பேருந்துகள் சென்றுவர தடை தொடர்கிறது.

கடற்கரையில் அனுமதி: கடற்கரைகளில் பொதுமக்கள் கூடலாம். இங்குள்ள கடைகளின் பணியாளர்கள், வியாபாரிகளுக்கு தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உயிரியல், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை வழிகாட்டி நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படவும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு விதி முறைகளை முறையாகப் பின்பற்றி, அரசு அறிவித்துள்ள தளா்வுகளை முழுப் பொறுப்புணா்வுடன் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.