விதி மீறிய உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிப்பு

விதி மீறிய உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிப்பு

1 mins read
0b37beaf-554d-46d5-a2f8-235f23cc2437
-

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத மூன்று உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன் காக்கும் வகையில், அனைத்து உணவகங்களும் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் உணவகங்களுக்ககான பொது சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றி தரமான, சுகாதாரமான உணவை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என சென்னை மாநகராட்சி வலி யுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

"கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னையில் உள்ள 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல், சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு, இவற்றை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட உணவகங்களின் மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

"அதேசமயத்தில், பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட மூன்று உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகங்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது," என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.