சென்னை: கோட்டூர்புரம் காவல்நிலையம் முன்பு ஏழு வழக்குரைஞா்கள் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இனிமேலும் அவர்கள் வழக்காடுவதற்கு வழக்கறிஞர் மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அடிதடி தகராறில் ஈடுபட்ட ஏழு வழக்கறிஞர்களும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்காட தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் மன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் நாயுடு நகரில் சிமெண்ட் சாலைகளைப் போட மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, இந்தச் சாலை போடுவது தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் நிலை யத்துக்கு வந்த இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இந்தக் காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியானது.

